17.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 17 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
பிரித்தானியாவின் கெற்றரிங் பகுதியில் கொல்லப்பட்ட தாயார் மற்றும் இரு இளம் பிள்ளைகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை நார்தம்ப்டன்ஷையர் பொலிசார் வெளியிட்டுள்ளனர். பெண்ணின் கணவர் கைது குறித்த கொலை சம்பவம் தொடர்பில், பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் 35 வயது அஞ்சு அசோக் எனவும், இவரது மகன் 6 வயது ஜீவா சாஜு எனவும் மகள் 4 வயது ஜான்வி சாஜு எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் 52 … Read more
சென்னை: சென்னையில் நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட‘ உத்தரவில், தமிழகத்தில் வரும் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாகும். ஆனால், மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதை ஈடுபட்டும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளத. இதுதொடர்பாக … Read more
புதுடில்லி மின்சார திருட்டு வழக்கில் வழங்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் இக்ரம். இவர் மின்சார திருட்டில் ஈடுபட்டதாக, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனை கடந்த 2019ல் இவர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2020ல் தண்டனையை அறிவித்தது. அதில், ஒவ்வொரு வழக்கிலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அனைத்தையும் அவர் தனித்தனியாக … Read more
ஜெய்ப்பூர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது … Read more
சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லையில், சீனா அத்துமீறி நுழைந்ததாக இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே தாக்குதல் நடந்த விவகாரம் இன்றுவரை பேசுபொருளாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவின் ஊடுருவலை இந்திய வீரர்கள் முறியடித்துவிட்டனர் என்றும், தாக்குதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர் என்றும் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார். இந்தியா – சீனா அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், `மோடி அரசின் சிவப்புக் கண்களை சீனக் கண்ணாடிகள் மறைத்துக்கொண்டிருக்கின்றன’ என மாநிலங்களவை … Read more
ஜேர்மனியின், ஏன் ஐரோப்பாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயுக் குழாய்கள் அமைக்கும் பணி இந்த வாரம் ஜேர்மனியில் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 900 கிலோமீற்றர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் ஜேர்மன் நகரமான Leipzigஐ மையமாகக் கொண்டு இயங்கும் Ontras என்ற நிறுவனம், 2030ஆம் ஆண்டு வாக்கில் 900 கிலோமீற்றர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை பெடரல் பொருளாதாரத்துறையும், அதனுடன் இணைந்து செயல்படும் Saxony மாகாண பொருளாதாரத்துறையும் வெளியிட்டுள்ளன. … Read more
ஈரான்: உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆப்சின் என்ற 20வயது இளைஞர். உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஏற்கனவே கொலம்பியாவைச் சேர்ந்த Edward ‘Niño’ Hernandez (36) என்னும் நபர் இடம் பிடித்திருந்தார். அவரை விட ஆப்சின் (Afshin) 7 சென்டி மீட்டர் உயரம் குறைந்தவர் என்பதால், தற்போது இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவரது … Read more
மதுரை: மதுரை ஸ்ரீராம்நகர் பகுதியில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த யோகசரஸ்வதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் அளித்த புகாரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுடெல்லி, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. … Read more