68 முறை கால்நடைகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்… தரமற்ற உதிரிபாகங்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை…

வந்தே பாரத் ரயில் இதுவரை எத்தனை முறை கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது மோதியிருக்கிறது ? தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து உதிரிபாகங்கள் வழங்கிய நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றதா ? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. திமுக-வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ. ராஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா பதிலளித்துள்ளார். அதில், 2022 ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் இதுவரை 68 முறை கால்நடைகள் மற்றும் … Read more

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாழ்த்து

சென்னை: அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞர் காட்டிய தடத்தில் சகோதரர் உதயநிதியை அமைச்சராக்கி இருப்பது தமிழகம் பெற்ற பெரு மகிழ்வுக்குரிய செய்தி என்று கூறியுள்ளார். கலைஞரின் சிந்தனை தடத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல் திறமையை போல அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்பட வாழ்த்து கூறியுள்ளார்.

நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் நவம்பரில் 5.85% ஆக குறைவு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் கடந்த அக்டோபரில் 8.39 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 5.85% ஆக குறைந்துள்ளது என மத்தியஅரசு கூறியுள்ளது. கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் கடந்த அக்டோபரில் 8.39 சதவீதமாக இருந்த நிலையில், … Read more

பில்கிஸ் பானு வழக்கு: புதிய அமர்வை விரைவில் அமைக்க வேண்டும் – மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம் சுப்ரீம் கோர்ட்டு காட்டம்

புதுடெல்லி, குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மதவாத வன்முறைகளில், பில்கிஸ் பானு விவகாரம் முக்கியமானது. கர்ப்பிணியாக இருந்த இளம்பென் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உள்ளூர் கும்பல், சிறு குழந்தையான அவரின் மகள் உட்பட குடும்பத்தினரையும் கொடூரமான முறையில் படுகொலை செய்தது. காலத்தால் அழிக்கமுடியாத வடுவாகிப் போன அந்த சம்பவத்தில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி அவர்களை குஜராத் அரசு … Read more

“ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக-வினருக்கு தைரியம் இல்லை!" – உமர் அப்துல்லா சவால்

2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து (அரசியலமைப்பு பிரிவு 370), மத்திய பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு இன்னும் அங்கு சட்டப்பேரவைத்த தேர்தல் நடைபெறவில்லை. இதுவரையில் ஆளுநர் ஆட்சிதான் அங்கு நடைபெற்றுவருகிறது. ஜம்மு – காஷ்மீர் இப்படியிருக்க அடுத்தாண்டு (2023) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் அதன்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அரசியல் கட்சிகளும் அதற்கு ஆயத்தமாகிவிட்டன. இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசோ, ஜம்மு … Read more

கனடாவில் 2-வது முதுகலைப் பட்டம் பெற்று அசத்திய இலங்கை மூதாட்டி! ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பாராட்டு

87 வயதான இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்று ஆச்சரியப்படவைத்துள்ளார். கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் பாராட்டு இதற்காக, ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்திற்கு வரதா நேரில் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர். ஒன்ராறியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் … Read more

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தெண்டு இலைகள் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தெண்டு இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீடி சுற்றுவதற்கான தெண்டு இலைகளை மூட்டை மூட்டையாக இலங்கைக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டது. இந்திய கடலோர காவல்படையினர் வஜ்ரா கப்பல் ரோந்து சென்றபோது பீடி இலைகளை  ஏற்றிவந்த படகை மறித்து பறிமுதல் செய்தது.   

தகவல் உரிமை சட்டத்தில் தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2000 நோட்டினை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து ரூ.2000 நோட்டும், புதிய வடிவிலான ரூ.500 நோட்டும் ரிசர்வ் வங்கியால் … Read more

தருமபுரி: கண்டிப்பை மீறியும் திருமணம் மீறிய உறவை தொடர்ந்த தந்தை! – ஆத்திரத்தில் மகன்கள் வெறிச்செயல்

தருமபுரி மாவட்டம், புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55) விவசாயி. இவரின் மனைவி கந்தம்மாள் (45). இவர்களுக்கு பிரவீன்குமார் (30), ரஞ்சித்குமார் (28) என இரு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், இருவரும் சில வாரங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கந்தம்மாள் மகன்களுடன் வீட்டிலும், கிருஷ்ணன் வயலிலும் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், கிருஷ்ணன் வயலுக்கு அருகே, வெட்டுக் காயங்களுடன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு … Read more

10ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேஷிய விமானம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது…

கோலாலம்பூர்: 10ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புதிய தகவ்லகள் வெளியாகி உள்ளன. அந்த விமானம்,  விமானிகளால்,  திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற மலேஷிய விமானம், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 2ந்தேதி நடுக்கடலில் காணாமல் போனது. இந்த விமானத்தில் 22 பேர் இருந்தனர்; அவர்களில்  பலர்,  சீனாவைச் சேர்ந்தவர்கள். மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. … Read more