“நான் கால் வெச்ச இடமெல்லாம் கண்ணிவெடிதான்; அதையெல்லாம் சமாளிச்சு.."- பாடகி டி.கே.கலாவின் போராட்டம்

`இனிமையாகப் பாடும் பலருக்கும் பேச்சிலும் அவ்வளவு இனிமை இருக்காது’ என்று சொல்லப்படுவது உண்டு. அந்தக் கூற்றுக்கு விதிவிலக்கான சிலரில் முக்கியமானவர் டி.கே.கலா. சிறப்பான தமிழ் உச்சரிப்புக்கு உதாரணமான பின்னணிப் பாடகியான கலா, எண்ணற்ற ஹிட் பாடல்களைப் பாடவில்லை; விருதுகளையும் வாங்கிக் குவிக்கவில்லை. ஆனாலும், இவரின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாடகி டி.கே.கலா “திப்புவுக்கு கிஃப்ட் பண்ணின அந்த பெல்ட்..!” – பாடகி ஹரிணி ஷேரிங்ஸ் பாடகி, குணச்சித்திர நடிகை, டப்பிங் கலைஞர் என பல … Read more

கச்சத் தீவு அந்தோணியார் விழாவில் பங்கேற்க 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 3500 பேருக்கு அனுமதி வழங்குவதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது. கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த  திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு,  மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளருது. இதுதொடர்பான,   முதற்கட்ட ஆலோசனை கூட்டம் இலங்கை , யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் … Read more

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடித்தபோது பெண் இறந்த சம்பவம் தொடர்பாக பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி நோட்டிஸ்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடித்தபோது பெண் இறந்த சம்பவ தொடர்பாக பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கட்டிடத்தை கிடைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை பணியை தொடங்க கூடாது என நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

பயணிகளை ஏற்றாமல் சென்ற விமானம்: ரூ. 10 லட்சம் அபராதம்

டெல்லி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடந்த 9-ம் தேதி காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு ‘கோ பர்ஸ்ட்’ விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணிகளின் உடைமைகள் ஏற்றப்பட்ட நிலையில் 55 பயணிகளை ஏற்றாமல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. 55 பயணிகளை ஏற்றாமல் அவர்களின் உடைமைகளை மட்டும் ஏற்றிக்கொண்டு விமானம் பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள ‘கோ பர்ஸ்ட்’ விமான நிறுவனம் அந்த … Read more

2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் விற்பனையில் உள்ள டொயொட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் உடன் மீண்டும் க்ரிஸ்டா டீசல் என்ஜின் கொண்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. ரூ.50,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். தற்போது இன்னோவா ஹைக்ராஸ் கார் பெட்ரோல் பதிப்பில் ம்பட்டும் கிடைத்து வரும் நிலையில் டீசல் என்ஜின் பெற்ற மாடல்ளுக்கு மட்டும் முந்தைய இன்னோவா க்ரிஸ்டா சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை பெற்று விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் … Read more

குமரி: வரிசையாக லாரிகளை நிறுத்தி லஞ்சம்; வைரலான வீடியோ – எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்; எஸ்.பி அதிரடி

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெரிய லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. நெல்லையில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் செல்கின்றன. போலீஸார் ஓவர் லோடுக்கு ஏற்றர்போல லஞ்சம் வாங்கிக்கொண்டு கடத்தலுக்கு துணைபுரிவதாகவும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸாரும், நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரும் இரு மாவட்டங்களிலும் வந்து செல்லும் வாகனங்களை கண்காணித்து … Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்டவரிடம் வேறொருவரை காதலிப்பதாக கூறிய இளம்பெண் மாயம்! விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மருத்துவ மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். நின்றுபோன திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தின் மகிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). ஹோமியோபதி மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சுபாங்கிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், வேறொருவரை காதலிப்பதாக பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடம் சுபாங்கி கூறியுள்ளார். இதன் காரணமாக திருமணம் நின்றதால் சுபாங்கியின் குடும்பம் கோபமடைந்தது. மாணவி மாயம்  அதன் பின்னர் … Read more

ராகுலின் யாத்திரைக்கு பாதுகாப்பு குறைபாடா? ஜம்மு போலீசார் விளக்கம்…

ஸ்ரீநகர்: ராகுலின் யாத்திரை  தற்போது பலத்த பாதுகாப்புடன் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக திடீரென நிறுத்தப் பட்டது.   இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை என காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ராகுலின் ஒற்றுமை யாத்தை எனப்படும் பாரத் ஜோடோ யாத்திரை இறுக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில் பல மாநிலங்களை கடந்து தற்போது,  ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. நேற்று  பனிஹாலில் இருந்து … Read more

இந்து மத கடவுள் சிலையை நதியில் கரைக்க சென்றபோது துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம் – குண்டு பாய்ந்து இளைஞர் பலி

பாட்னா, பீகார் மாநிலத்தின் பாட்னாவில் நேற்று இரவு இந்து மத கடவுள் சரஸ்வதி சிலையை கங்கை நதியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். அந்த ஊர்வலத்தில் செட்பூர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சிலர் பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென ஊர்வலத்தில் பங்கேற்ற திராஜ் என்ற 23 வயது இளைஞர் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதில் படுகாயடைந்த அந்த … Read more

ஜன-28: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.