ஆட்சியை கலைக்க எடுத்த முடிவு… நாட்டின் ஜனாதிபதியை கைது செய்த பொலிஸ்

பெரு நாட்டின் நாடாளுமன்றம் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்ய வாக்களித்ததுடன், கைது நடவடிக்கை முன்னெடுக்கவும் வழிவகுத்துள்ளது. ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் பெரு நாட்டில் ஆட்சியை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தலுக்கு முயன்ற நிலையில், ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ நாடாளுமன்ற அவையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஜனாதிபதிக்கு எதிராக 101 வாக்குகளும், ஆதரவாக 6 வாக்குகளும், 10 பேர் வாக்கெடுப்பை புறக்கணிக்கவும் செய்துள்ளனர். @reuters இதனையடுத்து, ஜனாதிபதி … Read more

டிசம்பர் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 201-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 201-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கு சீல்

சென்னை: சென்னை அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கும், பாரிமுனை நயினியப்பன் தெருவில் 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

புயல் எதிரொலியால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!| Dinamalar

புதுச்சேரி: புயல் சின்னம் எதிரொலியாக புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ்கள்,கட் அவுட், விளம்பர பலகைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாண்டஸ் புயல் சின்னம் எதிரொலியாக புதுச்சேரி,தமிழகத்தில் இன்று 8 ம் தேதி முதல் வரும் 10 ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரிக்கு வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டுள்ளனர்,. புயல் சின்னம் காரணமாக … Read more

புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தஞ்சாவூர்: புயல் காரணமாக தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தென்காசி ரயில் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தென்காசி: தென்காசி ரயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறை பயணமாக தென்காசிக்கு பொதிகை விரைவு ரயிலில் முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

BAN v IND: காயத்துடன் கடைசி வரை போராடிய ரோஹித்; ஆனாலும் வீழ்ந்த இந்தியா; தொடரை வென்ற வங்கதேசம்!

யார் அதிக திரில்லர்களை கொடுக்கிறார்கள் என்று அருள்நிதிக்கும் இந்திய வங்கதேச அணிகள் ஆடும் போட்டிகளுக்கும் போட்டி வைத்தோம் என்றால் நிச்சயம் இந்திய – வங்கதேச போட்டிகள்தான் வெற்றி பெறும். கடந்த போட்டி கொடுத்த திரில் அனுபவம் குறைவதற்குள் மற்றொரு திரில்லரை இந்த இரண்டு அணிகளும் இணைந்து பார்வையாளர்களுக்குக் கொடுத்துள்ளன. மெஹடி ஹாசனின் சதம், ரோஹித்தின் அரைசதம் எனக் கடந்த போட்டிகளை விட அதிக விறுவிறுப்புகளை இந்த இரண்டாவது ஒருநாள் போட்டி வழங்கியுள்ளது. Umran Malik ஆறு பௌலர்கள் … Read more

உக்ரைன் போரில் தோற்றால்… விளாடிமிர் புடினின் திட்டம் இதுதான்: கசிந்த ரகசியம்

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா தோற்றால் விளாடிமிர் புடின் தென் அமெரிக்காவுக்கு தப்பிவிடுவார் என தகவல் ஒன்று கசிந்துள்ளது. புடினின் குடும்பத்தினர் தப்ப திட்டம் குறித்த திட்டத்திற்கு நோவாவின் பேழை என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், புடினின் குடும்பத்தினர் மற்றும் எஞ்சிய நெருக்கமான உறுப்பினர்கள் அனைவரும் அர்ஜென்டினா அல்லது வெனிசுலாவுக்கு தப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. @reuters இதனிடையே, பிரபலமான விஞ்ஞானியும் புடினின் ஆதரவாளருமான ஒருவர் சீனாவில் தஞ்சமடைய வலியுறுத்திய நிலையில், ரஷ்ய நிர்வாகம் அதை ஏற்க மறுத்துள்ளதுடன், தோற்றவர்களை சீன … Read more

நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி காலமானார்

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயண மூர்த்தி(67) இவர் நடிகர் விசு மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். பூந்தோட்டம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சிவாஜி கணேசன், ரஜினி, விஜய், அஜித், உள்ளிட்டோரியின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் சிவ நாராயணமூர்த்தி நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, விவேக் உடன் … Read more