“தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!" – வானிலை ஆய்வு மையும் தகவல்

தென்மேற்கு கடலில் நிலவுகின்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து, கிழக்கு தென் கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலையில் மையம் கொண்டிருக்கிறது. இது, நாளை (22.11.22) தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னை கனமழை நாளை (22.11.22), வடதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் … Read more

FIFA உலகக்கோப்பை கால்பந்து: கோல் மழை பொழிந்த இங்கிலாந்து.. மிரட்டிய ஹரிகேன் படை

கலிஃபா மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 6 -2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது. முதல் பாதியில் முன்னிலை  FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மோதின. கலிஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்தின் ஜுடே பெல்லிங்கம் ஆட்டத்தின் 35வது நிமிடத்திலும், புகாயோ சகா 43வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பாதி முடியும் தருவாயில், … Read more

கருங்குளத்தில் தனியார் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: கருங்குளத்தில் தனியார் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் வந்த கார்த்தி (20) என்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றொரு வாலிபர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் மழை: பயிர்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்கள் விவசாயிகளே..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. பருவமழையின்போது வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் கால்நடைகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் நோய் தாக்குதல், தீவன சேமிப்பு, கால்நடை பராமரிப்பு ஆகியவைப்பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளது. பயிர் இனி சென்னையிலேயே இயற்கை விவசாய சான்றிதழ் பெறலாம்; புதிதாகத் திறக்கப்பட்ட விதைச்சான்று அலுவலகம்! அந்த ஆலோசனைகள் இங்கே இடம் … Read more

மகளை சுட்டுக்கொன்ற தந்தை, உடலை சூட்கேசில் அப்புறப்படுத்த உதவிய தாய்., அம்பலமான ஆணவக்கொலை

இந்தியாவில், வேறு சாதியைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்தம் மகளை தந்தை கொலை செய்ய, தாய் அவரது உடலை சூட்கேசில் அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 22 மகளை ஆணவக்கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சூட்கேசில் சடலம் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் சூட்கேஸுக்குள் 22 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பொலிசார் சூட்கேஸை மீட்ட பிறகு, பெண்ணை அடையாளம் காண டெல்லியில் போஸ்டர்களை … Read more

தடை எதிரொலி: உலகக்கோப்பை நடைபெறும் மைதானத்துக்குள் திருட்டுத்தனமாக பீர் கடத்திய ரசிகர்..

கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து, நடைபெறும் எட்டு மைதானங்களில் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு அனுமதி கிடையாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர். இதையடுத்து,  ரசிகர் ஒருவர் திருட்டுத்தனமாக மைதானத்திற்குள் பீரை கடத்தியுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும்,  22வது உலகக் கோப்பை காலபந்த தொடர் நடப்பாண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு … Read more

 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

தோகா: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

ஐகோர்ட் தலைமை நீதிபதியின் வாகனத்தை மறித்தவர் கைது| Dinamalar

கொச்சி :கேரளாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பாதுகாப்பு வாகனத்தை மறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். இவர் கொச்சி விமான நிலையத்தில் இருந்து, தன் வீட்டுக்கு காரில் சென்றார்; பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றன. அப்போது, மதுபோதையில் இருந்த ஒரு இளைஞர், நீதிபதி காரின் முன் சென்ற பாதுகாப்பு வாகனத்தை மறித்தார். அவரை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருடன் சண்டையிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் இடுக்கி … Read more

How to: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?|How To Link Aadhaar With EB Connection?

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. எப்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பதை பார்க்கலாம். TANGEDCO * முதலில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், Tangedco என்று தேடினால் வரும் பக்கத்தை திறந்து … Read more

வந்திருக்கும் பெண் ஒரு ஆவி என தெரியாமல் வரவேற்ற மருத்துவமனை ஊழியர்: ஒரு திகில் காட்சி

மருத்துவமனை ஒன்றில், வந்திருக்கும் நோயாளி ஒரு ஆவி என்பதை அறியாமல், அவரை மருத்துவமனை ஊழியர் ஒருவர் வரவேற்கும் காட்சி ஒன்று வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது.  கமெராவில் சிக்கிய காட்சி அர்ஜென்டினா மருத்துவமனை ஒன்றில், வந்திருக்கும் நோயாளி ஒரு ஆவி என்பதை அறியாமல், அவரை மருத்துவமனை ஊழியர் ஒருவர் வரவேற்கும் காட்சி ஒன்று CCTV கமெராவில் சிக்கியுள்ளது. வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் பாதுகாவலர் ஒருவர், பெண் நோயாளி ஒருவர் வருவதைக் கண்டதும் எழுந்து அவரை வரவேற்று அவரை மருத்துவர் அறைக்கு … Read more