சிவகங்கை: வீட்டின் முன்பு வைக்கப்பட்ட பெரியார் சிலை அகற்றம்… அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். வீட்டின் முகப்பில் மார்பளவு பெரியார் சிலையை அமைத்து இருந்தார். வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த இந்தச் சிலையை திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி 29-ம் தேதி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், உரிய அனுமதி, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பெரியார் சிலை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, தேவகோட்டை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் … Read more