பல் போனால் சொல் போச்சு… பற்களைப் பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்க! | வாய் சுகாதாரம் – 4

வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இந்த அத்தியாயத்தில் பல் ஈறு, எலும்பு, பற்காரை உள்ளிட்ட பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகளை விளக்குகிறார்… பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை இணை பேராசிரியர் கொட்டைப்பாக்கும், கொழுந்து வெத்தலையும்… போட்டா கேன்சர் வருமா…? வாய் சுகாதாரம் – 3 சென்ற வாரம், பல் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் முன்னுரிமை – முதியோர்களுக்கு தபால் ஓட்டு

சென்னை:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும்,   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுஇ, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 10.17 லட்சம் பேர் தங்களது … Read more

200வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்! ஆச்சரியமூட்டும் மூதாட்டிகள்: வீடியோ

இத்தாலிய இரட்டை சகோதரிகளான  பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிச்சியார்டி ஆகியோர் தங்களது 200வது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களால் ஆச்சரியமுடன் பகிரப்பட்டு வருகிறது. ஆச்சரியமூட்டும் இரட்டை சகோதரிகள் தற்போதைய கால சூழ்நிலையில் தனிமனிதர் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வரையாக குறைந்துவிட்ட நிலையில், 90 வயதை தாண்டி உயிர் வாழும் மக்களை நாம் அனைவரும் ஆச்சரியத்துடனே பார்க்க தொடங்கி விட்டோம். சொல்லப்போனால் வாழ்வதும் கூட ஒரு கலை தான். குறிப்பிட்ட ஒழுக்க … Read more

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் போலீசார் சோதனை

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கே.கே.நகர் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

மாணவி கொலை தந்தை கைது | Father arrested for murdering student

மும்பை: மஹாராஷ்டிராவில், மருத்துவ மாணவி கவுரவக் கொலை தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா, நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவம் படிக்கும் மாணவி சுபாங்கி ஜோக்டண்டுக்கு, ௨௨, சமீபத்தில் பெற்றோர் திருமணம் நிச்சயித்தனர். மணமகனாக வரப் போகிறவரிடம் பேசிய சுபாங்கி, தான் ஒருவரை காதலித்து வருவதாகஅவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்த திருமணம் தடைபட்டது. இதில் ஆத்திரமடைந்த சுபாங்கியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள்என ஐந்து பேர், அவரது கழுத்தை … Read more

ஈரோடு கிழக்கு: சிவபிரசாந்த்… தந்தை டு மகன்… கிரிக்கெட் வீரரை களம் இறக்கிய டி.டி.வி.தினகரன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். 29 வயது இளைஞரான இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரியாவார்.   கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மாவட்ட அளவில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். திருமணமான இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி கீர்த்தனா மயக்கவியல் நிபுணராக உள்ளார். … Read more

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்: சென்னை மேயர் பிரியா பேட்டி

சென்னை: விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என சென்னை மேயர் பிரியா பேட்டி அளித்துள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லஞ்சம் வாங்கி கொழித்த அதிகாரிகளும் கூட அதிர்ச்சி தான் ஆகியிருப்பாங்க!| Speech, interview, report

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுதும், போதை பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில், புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கம், மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு உரிய சட்டம் கொண்டு வருவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். கர்நாடகாவில் … Read more

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு – காஷ்மீர் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

ஸ்ரீநகர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரை, தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று காலை பனிஹல் என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. ராகுல்காந்தியுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லாவும், யாத்திரையில் கலந்து கொண்டார். ராகுல்காந்தியை போலவே அவரும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து நடந்தார். உமர் … Read more

Doctor Vikatan: மெனோபாஸ் அவதிகளை டயட் மூலம் சமாளிக்க முடியுமா?

Doctor Vikatan: என் வயது 53. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் உடல் சூடாவது, வியர்வை, தூக்கமின்மை போன்றவை தொடர்கின்றன. உணவுப்பழக்கத்தின் மூலம் மெனோபாஸ் அவதிகளுக்குத் தீர்வு காண முடியுமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு… எளிய தீர்வுகள் உண்டா? மெனோபாஸ் என்பது நம் உடலில் நடக்கக்கூடிய இயற்கையான ஒரு … Read more