தலைப்பு செய்திகள்
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது!
சென்னை: மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக்கு 40 கி.மீ மேற்கு-தென்மேற்கில் நிலைகொண்டுள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி| Dinamalar
ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சமையல் ‘காஸ்’ சிலிண்டர் வெடித்து, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தானின் ஜோத்பூர்அருகே புங்ரா என்ற கிராமத்தில், சுரேந்திர சிங் என்பவர் வீட்டில் நேற்று திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதற்காக, அவரது உறவினர்கள் நேற்று முன்தினமே அவர் வீட்டில் கூடினர். நேற்று முன்தினம் மதியம் அனைவருக்கும் உணவு தயாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது காஸ் சிலிண்டரில் கசிவு … Read more
மாண்டஸ் புயல்: விழுப்புரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்… போனில் உரையாடிய முதலமைச்சர்!
மாண்டஸ் புயல், புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே நேற்று இரவு கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்த நிலையில்… மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலையில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் சின்னத்தின் காரணமாக நேற்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருந்தது. மாண்டஸ் புயல், கரையை நெருங்க நெருங்க விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் அருகேயுள்ள 19 மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடல் … Read more
கொரோனாவுக்கு உலக அளவில் 6,656,313 பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,656,313 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 652,842,775 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 628,631,597 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,426 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் தேர்தலில் சாதனை வெற்றி பிரதமரை புகழும் சர்வதேச ஊடகங்கள்| Dinamalar
புதுடில்லி, :’குஜராத்தில், வரலாறு காணாத வெற்றியின் வாயிலாக பா.ஜ., அரசு புதிய சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கே முக்கிய காரணம்’ என, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. கடந்த 1995 முதல், தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து … Read more
FIFA உலகக்கோப்பை 2022-ல் 9 விடயங்களை சாத்தியமாக்கிய கத்தார்! கால்பந்து ரசிகர்களுக்கான சுவாரசிய தகவல்
FIFA உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டிகளை நடத்தும் கத்தார், இதன்மூலம் இதுவரை நடந்திராத ஒன்பது விடயங்களை சாத்தியமாக்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கியதால், கத்தார் 2022 உலகக் கோப்பை பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும். அதற்கேற்ப, கத்தார் இந்த 22-வது உலகக்கோப்பையை நடத்துவதன் மூலம் ஒன்பது விடயங்களை சாத்தியமாக்கி காட்டியுள்ளது. 1. FIFA உலகக் கோப்பையை நடத்தும் முதல் அரபு நாடு கத்தார் FIFA … Read more
கேரள ஐகோர்ட் ரத்து | Dinamalar
கொச்சி: இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிறித்துவ தம்பதியர், ஒரு ஆண்டு சேர்ந்து வாழ்ந்த பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மனம் உவந்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிறிஸ்துவ தம்பதியர் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதன் பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவதாக சட்டத்தில் விதிமுறை உள்ளது. இதை ஓராண்டாக குறைத்து, கேரள உயர் நீதிமன்றம் 2010ல் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஓராண்டு கால அளவும் … Read more