சாலையோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கடன் திட்டம் 2024 டிசம்பர் வரை நீட்டிப்பு!

சாலையோர வியாபாரிகள் பயனடைய ஏதுவாக, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வா நிதி) திட்டம் அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி, அவர்களின் வணிக முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) என்ற கடன் திட்டம் செயல்படுத்தப்பட்ட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகளுக்கு … Read more

புயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை …

சென்னை: மாண்டஸ் புகல் நள்ளிரவு கரையை கடந்து, அதனால் ஏற்பட்ட சேதங்களை தமிழகஅரசு சரி செய்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என  அதற்கான உதவி எண்ணை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 10 மணிக்கு கடக்கத் தொடங்கிய இந்த புயல் அதிகாலை 3மணி அளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக கூறப்படுகிறது. இந்த புயல் பாதிப்பு … Read more

மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்னர் என சென்னை காசிமேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். புயல், மழை பாதிப்புகளை அகற்ற பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி. மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால் தான் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் … Read more

நிச்சயத்துக்கு சில மணிநேரத்துக்கு முன்… பெண் மருத்துவரை வீடு புகுந்து கடத்திய கும்பல்! | Video

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் அதிபட்லா பகுதியில் வசிப்பவர் வைஷாலி (24). இவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சுமார் 50 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஆயுதத்துடன் வைஷாலி வீட்டில் புகுந்து, வீட்டில் உள்ள பொருள்களை சேதப் படுத்தியதுடன், அவரை வலுகட்டாயமாக காரில் கடத்திச் சென்றிருக்கிறது. மேலும், அவரின் … Read more

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு! மேயருடன் அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை:  தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என சென்னை மழை பாதிப்பு குறத்து மாநக மேயர் பிரியாவுடன் இணைந்த ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் … Read more

மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடல்

சென்னை: புயலால் இரண்டு மரங்கள் சரிந்துள்ளதால் மெரினாவில் உள்ள கலைஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முந்தைய நாள்; 150 அடி உயர பாறையிலிருந்து செல்ஃபி… கல்குவாரி குட்டையில் விழுந்த ஜோடி

கேரள மாநிலம், கொல்லம் பரவூரைச் சேர்ந்தவர் வினு கிருஷ்ணன்(25). துபாயில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் கொல்லம் பாரிப்பள்ளியைச் சேர்ந்த சாந்த்ரா எஸ்.குமார்(19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதோடு நேற்று திருமணம் நடக்கவிருந்தது. அதற்காக துபாயில் இருந்து ஒரு வாரம் முன்பு வினு கிருஷ்ணன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் வினு கிருஷ்ணனும், சாந்த்ராவும் சேர்ந்து ஆயிரவில்லி என்ற கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் அருகில் உள்ள 150 அடி உயர பாட்டுப்புறம் பாறை மீது … Read more

கரையை கடந்த மாண்டஸ் புயல்: விளைவித்த சேதங்கள் என்னென்ன?

வட தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மான்டஸ் புயல் சென்னையின் மாமல்லபுரம் அருகே இரவு 2:30 மணியளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையை கடந்த மாண்டஸ் சென்னை மற்றும் வங்க கடலை ஒட்டியுள்ள வட கிழக்கு மாவட்டங்களை அச்சுறுத்திய மாண்டஸ் புயல், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்து, பின்னர் வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டல புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே அதாவது கிட்டத்தட்ட … Read more

மாண்டஸ் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்புகளுக்கும்,  சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். மேலும், மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கூறினார்.‘ சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் பலத்த சூறைக்காற்று மற்றும் கனமழையுடன் நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.  அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் … Read more

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.