“பாஜக இந்தியைத் திணிக்க முயன்றால், வார்டு கவுன்சிலரைக்கூட வெற்றி பெற முடியாது!" – டி.டி.வி.தினகரன்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அ.ம.மு.க சார்பில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தி மொழியைத் திணிக்கும் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வளராது. தமிழகத்தில் இந்தி மொழியைத் திணிக்க முயன்ற காங்கிரஸால், அதன் பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலையை பா.ஜ.க நன்கு உணர்ந்திருக்கிறது. அது போன்ற ஒரு விபரீத முடிவை பா.ஜ.க எடுக்காது. பா.ஜ.க தமிழகத்தில் இந்தியைத் திணிக்க … Read more