புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம்

சென்னை: தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.   நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ” ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 ஆகும். இது … Read more

புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று மக்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருச்செந்தூர், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

ஒசூர்: கத்தி முனையில் 15 பவுன் நகை திருட்டு; தப்பியோடிய மூவருக்கு வலை – தொடர் திருட்டால் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (48). இவர் ஓசூர் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முந்தினம் காலை, வழக்கம் போல ஓட்டலுக்கு சென்று விட்ட நேரத்தில், அவரின் மனைவி பாஸ்கல் ஜோஷ்வினா, மாமியார் லூர்து மேரி மற்றும் மாமனார் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க, 3 இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து, பாஸ்கல் ஜோஷ்வினா மற்றும் லூர்து மேரி ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் … Read more

எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாட்டுக்கான தொலைநோக்கி திட்டத்துடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பாட்டால் பாஜக வெற்றி பெறுவது கடினம். இதுதான் இன்றைய நிலவரம் என்பதை கலத்திலிருந்தே உணர்ந்துள்ளேன். எனவே எதிர்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

ஒரே வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் பலி! புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலியாகினர். புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், நட்சத்திர விடுதிகளில் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடினர். இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் சுற்றி புத்தாண்டை வரவேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தில் நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர். ஒரே வாகனத்தில் சென்ற இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாட ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று … Read more

புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு விஸ்வரூப சிறப்பு தரிசனம் அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது; சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமியின் பிரசங்கத்துடன் நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட ரஷ்யா-உக்ரைன் சிறைக் கைதிகள் பரிமாற்றம்! ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி தருணம்

புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்ட பின்னர், உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கைதிகள் பரிமாற்றம் ரஷ்யா – உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்தன. உக்ரைன் மொத்தம் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. அதேபோல், ரஷ்யா 140 உக்ரேனியர்களை ஒப்படைத்ததாக உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியான … Read more

சென்னையில் குருவாயூர்

சென்னை- நங்கநல்லூரில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும், மிகவும் அழகாக, கேரள பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தைப் பார்க்கும்போதே ஒரு நிம்மதி பரவுகிறது. ஸ்ரீகுருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் எனும் அமைப்பினரால், சுமார் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது இந்த ஆலயம். வருடத்தின் முக்கியமான பண்டிகைகளும் விரத காலங்களும் இங்கு முறையே அனுஷ்டிக்கப்பட்டு, அந்த நாட்களில் ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் கோலாகலமாக நடைபெறுகின்றன. திருமண பாக்கியம், பிள்ளை … Read more