வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் வாடா தமிழ்நாட்டில் பெருமபாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.