ஜனவரி 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 248-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 248-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜன-24: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

முதல்வருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி| The case against the Chief Minister was dismissed

புதுடில்லி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ௨௦௧௮ல் ராஜஸ்தானின் ஆல்வாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவருடைய பேச்சு தன் மத நம்பிக்கையை புண்படுத்தியுள்ளதாக, உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த நாவல் கிஷோர் சர்மா என்பவர், மாவ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; அது நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவர் அலகாபாத் உயர் … Read more

சுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு – டெல்லி கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கடந்த நவம்பர் 15-ந் தேதி அவருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அவரை விசாரணைக்காக அமலாக்கத்துறை பலமுறை அழைத்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்குலின் … Read more

இந்த வார ராசிபலன்: ஜனவரி 24 முதல் 29 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

நதிக்கரை முருகன் திருக்கோயில்

பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு. சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பழநியாண்டவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,747,390 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.47 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,747,390 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,427,543 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645,343,392 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,408 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி| Three killed after drinking fake liquor in Bihar

சிவான், பீஹாரில், கள்ளச்சாராயம் குடித்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; ஏழு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் — ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2016 ஏப்ரல் முதல், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில், ஷரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

ஷாருக்கானை பற்றி இன்னும் அவ்வளவாக தெரியாது : தொலைபேசியில் பேசிய நிலையில் அசாம் முதல்-மந்திரி

கவுகாத்தி, நடிகர் ஷாருக்கான்-தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ இந்திப்படம் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இதன் ஒரு பாடல் காட்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு தியேட்டருக்குள் புகுந்த பஜ்ரங்தள் அமைப்பினர், ‘பதான்’ பட சுவரொட்டிகளை கிழித்து தீயிட்டு எரித்தனர். படத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கு ஷாருக்கான் கண்டனம் தெரிவித்தார். அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ”ஷாருக்கான் யார்?” என்று கேட்டார். பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் … Read more

சாலை விதியை மீறி வீடியோ எடுத்த பெண்ணுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம்| A fine of Rs. 17 thousand was imposed on the woman who took the video in violation of the traffic rules

புதுடில்லி நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி, ‘வீடியோ’ எடுத்த பெண்ணுக்கு, உத்தர பிரதேச போலீசார் 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். சமூகவலைதளங்களில் புகைப்படங்கள், கருத்துகளை பதிவிடுவது போல, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘வீடியோ’ எனப்படும் குறு ‘வீடியோ’க்கள் பதிவிடும் வழக்கம் இளைய தலைமுறையினர்மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் போடும் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர். இந்த வகையில், உ.பி.,யின் காஜியாபாதை சேர்ந்த, வைஷாலி சவுத்ரி குடெயில் என்ற பெண், ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலமாக உள்ளார். இவரை, … Read more