சென்னை பல்கலைக்கழகம்: பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட மாணவ அமைப்பினர்!
சமீபத்தில் சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்ட `India: The Modi Question’ ஆவணப்படம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறி, விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படம், 2002-ம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியை விவரிக்கும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த ஆவணப்படத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த மோடி, கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்து, நடவடிக்கை … Read more