பழனி தைப்பூசத்திருவிழா தொடங்கியது

பழனி: முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர். … Read more

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டம் நிறைவு

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள்  கூட்டம் நிறைவடைந்து. நாடாளுமன்ற கூட்டத்தின் திமுக எம்.பி.க்களின் செய்லபாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

ஓசூர்: காதலியைக் கொன்று, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது – கொலைக்கான காரணம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரிகை அருகேயுள்ள நெரிகம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடசாமி மகள் பிரியங்கா (22). மாற்றுத்திறனாளியான இவர், ஓசூரிலுள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். பேரிகை அருகே முதுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் (24) என்பவர் பிரியங்காவை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை பாகலூர் ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். சடலத்தை மீட்ட பேரிகை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு … Read more

கடுமையான மாரடைப்பு! 500 படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர் உயிரிழப்பு

பிரபல நடிகர் மந்தீப்ராய் மாரடைப்பால் தனது 72வது வயதில் காலமானார். 500 படங்களில் நடித்த நடிகர் கன்னட சினிமாவில் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் மந்தீப்ராய். இவருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மந்தீப்ராய்க்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்தது. Sandalwood actor #MandeepRoy is no more. He passed away due to a massive heart attack in the … Read more

விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம்… வழக்குப் பதிவு செய்தது இண்டிகோ நிறுவனம்…

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ 6E 5274 விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 24 ம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விவராத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறி அந்த பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்க தயாரான நிலையில் அவசர கால வழியை பயணி ஒருவர் திறக்க முயற்சித்த நிலையில் அதனைப் பார்த்த விமானச் சிப்பந்தி உடனடியாக விமானியை தொடர்பு கொண்டு … Read more

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு

சென்னை: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு செய்துள்ளது. பங்குசந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து வெளியான ஆய்வறிக்கை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஜனாதிபதி மாளிகையிலுள்ள முகலாய தோட்டம், `அம்ரித் உத்யான' எனப் பெயர்மாற்றம்!

டெல்லியில் அமைந்திருக்கும், ராஷ்டிரபதி பவன் என்றழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகையில் வரலாற்றை நினைவுகூரும் விதமாக அங்குள்ள தோட்டங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றுதான், பல ஆண்டுகளாக முகல் தோட்டம் என்று அழைக்கப்பட்டுவந்த `முகலாயர் தோட்டம்’. ஜனாதிபதி மாளிகை இந்த நிலையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டமான `ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ எனப்படும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் முகலாயர் தோட்டம் உட்பட பல்வேறு தோட்டங்களுக்கு `அம்ரித் உத்யன்’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது … Read more

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் மலர்ந்த காதல் கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற ஸ்வீடன் நாட்டு பெண் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக்கில் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்ற நபரை சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. … Read more

ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு

ஒடிசா: ஒடிசா மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரத் துறை அமைச்சராகவும் பிஜு ஜனதாதளத்தின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா தாஸ். இன்று ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார். வாகனத்தில் இருந்து இறங்கும்போது நபா தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். … Read more