ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு

ஒடிசா: ஒடிசா மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரத் துறை அமைச்சராகவும் பிஜு ஜனதாதளத்தின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா தாஸ். இன்று ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார். வாகனத்தில் இருந்து இறங்கும்போது நபா தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். … Read more

தமிழகத்தில் பிப்.1,2-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கையில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பிப்ரவரி 2-ல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் மின் திருட்டா?- என்ன சொல்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்?

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதோடு, ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.351.12 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு ரூ. 303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராஜ்ய சபா எம்.பி-யுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் … Read more

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ‘உடல் எடையைக் குறைக்கிறேன்’ என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ‘நேரமில்லை’ என்கிறார்கள் சிலர். காலை உணவை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்? காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து … Read more

முத்தமிழ் பேரவையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில், மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய முதல் அமைச்சர், மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு … Read more

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பாலத்தின் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பாலத்தின் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளார். குவெட்டா நகரில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. பலுசிஸ்தானில் லாஸ்பெலா என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது பாலத்தின் தூண் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

‛என்னை ஹிந்து என்று அழைக்க விருப்பம்: கேரள கவர்னர் ஆரிப் கான் பேச்சு| ‛Want to call me a Hindu: Kerala Governor Arif Khans speech

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தப்புரம்: என்னை ஹிந்து என்று அழைக்க விரும்புகிறேன் என கேரள கவர்னர் ஆரிப் கான் கூறியுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஹிந்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு, கேரள கவர்னர் ஆரிப் கான் கூறுகையில், என்னை ஹிந்து என்று அழைக்க விரும்புகிறேன். காலனித்துவ காலத்தில் ஹிந்து, முஸ்லீம் மற்றும் சீக்கியர் போன்ற சொற்களை பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருந்தது, ஏனென்றால் குடிமக்களின் சாதாரண உரிமைகளை கூட தீர்மானிக்க ஆங்கிலேயர்கள் … Read more

நடிகை உர்ஃபி ஜாவேத்; உடலை மறைக்க ஆடை கொடுக்க முன்வந்த இளம்பெண்! – என்ன நடந்தது

மாடல் மற்றும் டி.வி நடிகையான உர்ஃபி ஜாவேத் அணியும் ஆடைகள் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் விதமாகவே இருக்கும். சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக வெளியில் வந்தார். இதனால் அவர்மீது பா.ஜ.க பெண் பிரமுகர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து மும்பை போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். உர்ஃபி ஜாவேத்தும் போலீஸார் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். தன்னுடைய தொழிலுக்கு இது போன்ற ஆடை அவசியமாக இருக்கிறது என்று போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். உர்ஃபி ஜாவேத் இந்தப் பிரச்னை முடியும் முன்பு, … Read more

சுவிஸில் சமீபத்தில் குடியேறிய தந்தை – மகனான 2 இலங்கை தமிழர்கள் மரணம்! வெளியான முதல் புகைப்படம்

சுவிட்சர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 2 இலங்கை தமிழர்கள் உயிரிழப்பு இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் Thanapalasingham Kannan (69) மற்றும் Kannan Suresh (34). இருவரும் தந்தை மற்றும் மகன் ஆவார்கள். Thanapalasinghamமும், Kannan-ம் சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்கள். இந்த நிலையில் சென்.கேலன் (St.Gallen) நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். புகைப்படம் காரை Kannan ஓட்டிய நிலையில் … Read more