பருமனான உடல்வாகு… தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா? | காமத்துக்கு மரியாதை – S 3 E 27

“என் ஹஸ்பண்ட் ரொம்ப ஹேண்ட்சமா இருப்பார். ஆனா உடல் பருமனாகவும் இருப்பார். இதனால, தாம்பத்திய உறவு வெச்சுக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு.  அவர் என்மேல ரொம்ப பிரியமா இருக்கார். நீங்க  பருமனா இருக்கிறதால உறவு வெச்சுக்கிறப்போ கஷ்டமா இருக்குன்னு வெளிப்படையா சொன்னா மனசுக் கஷ்டப்படுவாரோன்னு சங்கடமா இருக்கு. என்ன செய்யுறது டாக்டர்?” – இது ஒரு வாசகியின் கேள்வி. [email protected] மெயில் மூலமாக தன்னுடைய கேள்வியை நமக்கு அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கு, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதிலளிக்கிறார்.  Dr. Narayana Reddy பால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E19 “உடல் பருமனான கணவருடன் உறவுகொள்ளும்போது, நிச்சயம் அது உங்களுக்கு உடலளவில் கடினமானதாகத்தான் இருக்கும். தவிர, ஒருவருடைய … Read more

திருமண ஆடை வடிவிலான பிரமாண்ட கேக்…கின்னஸ் சாதனை படைத்த சுவிட்சர்லாந்து பெண்

திருமண ஆடை வடிவிலான கேக் ஒன்றை வடிவமைத்து சுவிட்சர்லாந்தை சேர்ந்த நடாஷா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திருமண ஆடை வடிவில் கேக் சுவிட்சர்லாந்தின் பெர்ன் பகுதியில் ஸ்வீட்டிகேக்ஸ் என்ற பேக்கிரியை நடாஷா கோய்ன்(Natasha Coline)  என்ற பெண் நடத்தி வருகிறார்,  புதுமையான பல வடிவங்களில் கேக்குகளை வடிவமைப்பதில் இவர் அந்த பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் உலக திருமண கண்காட்சியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியின் இறுதி … Read more

சென்னையில் போலீஸ் என கூறி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த கொள்ளையனை அடையாளம் கண்டது போலீஸ்

சென்னை: சென்னை யானைக்கவுனியில் போலீஸ் என கூறி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்த்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர்.

மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்கு| FIR against ex-cricketer Vinod Kambli on charge of assaulting wife; police issue notice to him to record statement

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, குடிபோதையில் பாத்திரத்தை தன் மீது வீசி தாக்கியதாக அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று முன்தினம்(பிப்.,3) நள்ளிரவில் மது போதையில் வந்த வினோத் காம்ப்ளி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தலையிட்டு தட்டி கேட்ட போது, சமையலறைக்கு சென்று பாத்திரத்தை எடுத்து வந்து தன் மீது வீசினார். அதில் தனக்கு காயம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியுள்ளார். இதன் அடிப்படையில், பாந்த்ரா போலீசார் … Read more

ஏலத்திற்கு விடப்பட்ட மார்லன் பிராண்டோ எழுதிய பிரேக் அப் கடிதம்; விலை எவ்வளவு தெரியுமா?

‘தி மென்’ என்ற படத்தில் அறிமுகமான மார்லன் பிராண்டோ ‘எ ஸ்ட்‌‌ரீட் கார் நேம்டு டிஸையர்’, ‘ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட்’ போன்ற படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர். உலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும்  அவற்றுக்கெல்லாம் முன்னோடி ‘தி காட்ஃபாதர்’ திரைப்படம். அத் திரைப்படத்தில் தனது நேர்த்தியான மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் மார்லன் பிராண்டோ. மார்லன் பிராண்டோ 1973 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 45- வது ஆஸ்கர் விருது வழங்கும் … Read more

டால்பின்களுடன் நீந்தும் ஆசையில் சுறா மீனுக்கு இரையான சிறுமி

அவுஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்திய 16 வயது சிறுமி சுறா மீன் தாக்கி கொல்லப்பட்டார். மேற்கு அவுஸ்திரேலியாவின் மாநிலத் தலைநகர் பெர்த்தில் உள்ள ஆற்றில் சுறா கடித்ததில் 16 வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தார். பெர்த்தின் ஃப்ரீமண்டில் துறைமுகப் பகுதியில் உள்ள ஸ்வான் ஆற்றின் போக்குவரத்துப் பாலம் அருகே உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 3:45 மணியளவில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். iStock & DT பலத்த காயங்களுடன் தண்ணீரிலிருந்து இழுக்கப்பட்ட சிறுமி சம்பவ … Read more

நெல் ஈரப்பதம் 19%ஆக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

திருவாரூர்: நெல் ஈரப்பதம் 19%ஆக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் அருகே முதல் சேத்தியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து வருகிறார். நெல் அதிகம் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களின் அருகே மற்றொரு கொள்முதல் திறக்கவும் அமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.

”டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை, 2.15 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு!” – அமைச்சர் சக்கரபாணி தகவல்

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ததால் 2.15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தஞ்சாவூரில் ஆய்வுசெய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நெல் ஈரப்பதத்தை ஆய்வுசெய்த அமைச்சர் சக்கரபானி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாள்கள் மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. வயலில் தேங்கிய … Read more

யாருமே இல்லையே! மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்த நடுத்தர வயது பெண்.. சிக்கிய கடிதம்

தமிழகத்தில் மகன் இறந்தநாளில் 37 வயதான பெண் தனது மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமி கும்பிட்டு விட்டு தற்கொலை சிவகாசியை சேர்ந்தவர் பாண்டி தேவி(37). இவரது கணவர் சாலைமுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி (17) என்ற மகளும், மகாராஜா என்ற மகனும் உள்ளனர். பாண்டிதேவி சித்துராஜபுரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மகாராஜா கடந்த 2022 ஜனவரி 3- ம் திகதி உடல்நிலை … Read more

தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் கடிதத்தை  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புறக்கணித்துள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார். நடுநிலை தவறி ஒருசிலரின் கைப்பாவையாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.