“மகனிடம் மட்டும் சொல்லிடாதீங்க” விமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சிய கூத்தாடிய மும்பை தொழிலதிபர்

விமான நிலையத்தில் மகனை போர்டிங் கேட் வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்ட தொழிலதிபரை சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிக்கி கொண்ட தொழிலதிபர் பொதுவாகவே விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் புறப்பாடு முனையம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் சிறப்பான அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சிந்தன் காந்தி என்ற நபர், படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்லும் தனது மகனை போர்டிங் … Read more

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்தடை காரணமாக விமான போக்குவரத்து பாதிப்பு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்தடை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 282 விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு: "அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்!" – மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலும், தாளவாடி தாலுகாவில் உள்ள மலைகிராமங்களான கெத்தேசால், அரேபாளையம் பகுதிகளிலும் மனிதம் சட்ட உதவி மய்யம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. கோபியில் நடந்த இந்த முகாமில் சட்ட உதவி மய்யத்தின் நிறுவனரும், தி.க மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் சென்னியப்பன் வரவேற்பளித்தார். இந்திய நீதிபதிகள் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் முன்னாள் நீதிபதி பரஞ்சோதி தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் முன்னிலை வகித்தார். பாஸ்கரன் மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் … Read more

சாண்டா உடையில் உக்ரேனிய போர் விமானி., ரஷ்ய இலக்குகளை தாக்கிய காட்சி

உக்ரேனிய போர் விமானி ஒருவர் சாண்டா உடையில் ரஷ்ய இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை வீசினார். உக்ரைனின் MiG-29 போர் விமானம் ரஷ்ய இலக்குகளை நோக்கி ஏவுகணையை வீசும் சமீபத்திய வீடியோ ஒன்று வைரலானது. உக்ரேனிய ராணுவத்தால் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், சான்டாவைப் போல் உடையணிந்த ஒரு போர் விமானி, அமெரிக்காவின் AGM-88 HARM air-to-surface கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளுடன் தாக்குதல் நடத்துவதைக் காட்டுகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் கமெண்டுகளில், … Read more

2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவா்த்தனை ரூ. 782 கோடி…

டெல்லி: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ரூ. 782 கோடி யுபிஐ வாயிலாக பண பரிவா்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) NPCI தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் அதிகம் என கூறப்பட்டுள்ளது. இன்றைய நவீன நயகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதிலும், பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை … Read more

100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

Varisu : "உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்"- ஜேம்ஸ் வசந்தன்

விஜய் நடிப்பில்  வெளியாகவுள்ள வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினரும் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி, அவர் கூறிய சில அட்வைஸ், புதிய ஸ்டைலில் தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் என அனைத்துமே கடந்த வாரம் சமூக வலைதளங்களை  ஆக்கிரமித்திருந்தது.  விஜய் எளிமையாக உடையணிந்து இயல்பாக  ஹேர் ஸ்டைலில் கலந்துகொண்டார். இவை … Read more

கடன் வாங்கி கனடாவுக்கு கனவுகளுடன் சென்ற இந்திய இளைஞர்! 2வது நாளே மாரடைப்பால் இறந்த சோகம்

இந்திய இளைஞர் ஒருவர் கனடாவுக்கு சென்ற இரண்டு நாளில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் இறந்த இந்திய இளைஞர் பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர் ஹராசிஸ் சிங் பிந்தரா (25). இவர் மாணவர் விசாவில் சமீபத்தில் கனடாவின் பிராம்டனுக்கு சென்ற நிலையில் கடந்த 29ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார். அதன்படி சிம் கார்டு வாங்குவதற்கு கடைக்க்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹாராசிஸ் உயிரிழந்தார். tribuneindia … Read more

ஐ பி எல் 2023 : வீரர்களின் பணி சுமையைக் குறைக்க என்.சி.ஏ.-வுடன் உரிமையாளர்கள் இணைந்து செயல்பட முடிவு

வீரர்களின் பணி சுமையைக் குறைக்க தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.)-வுடன் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் காயமடையும் வீரர்கள் மற்றும் மற்ற வீரர்களின் பணி சுமை போன்றவற்றை சமாளிக்க பணி சுமை மேலாண்மை குழு அமைக்க முடிவெடுத்துள்ளது. 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தவிர டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்திற்கு … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கிடு கிடு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,800-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.