Recession: தலைதூக்கும் பொருளாதார மந்தநிலை – இந்திய ஐ.டி நிறுவனங்கள் சமாளிக்குமா, சறுக்குமா?

ஐ.டி துறையின் இன்றைய ட்ரெண்டிங் வார்த்தை, ‘Recession’. எல்லோருக்கும் புரியும்படி சொல்வதென்றால் ‘பொருளாதார மந்தநிலை’. இதைக் கேட்டாலே ஒருவித கலக்கமும் அச்சமும் ஏற்படும். கொரோனா பேரழிவின் தாக்கம் சற்றே ஓய்ந்து, இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலை தற்போதுதான் சற்று சீரடைந்துள்ளது. பல்வேறு துறைகள் பெரும் அழிவிலிருந்து மீண்டு, தற்போதுதான் இயல்புநிலைக்கு வந்துள்ளன. அதற்குள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை (Recession) கவலை தருகிறது. முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவலையடைய வைத்துள்ளது. இந்த நேரத்தில் … Read more

உலகில் முதல் நாடக மத்திய பசிபிக் நாடான கிரிப்பாட்டி தீவில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது

கிரிபாட்டி: உலகில் முதல் நாடக மத்திய பசிபிக் நாடான கிரிப்பாட்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. கிரிபாட்டி தீவில் 2022-ம் ஆண்டு முடிவடைந்து 2023 ம் ஆண்டு பிறந்துள்ளது. உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது.

"அம்மா ஆகத் தயாராகிவிட்டேன், வாழ்த்துங்கள்!" – வீடியோ மூலம் தகவல் வெளியிட்ட நடிகை பூர்ணா

கேரள நடிகை ஷம்னா காசிம் தனது பெயரை பூர்ணா என மாற்றி தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான பூர்ணா ‘மஞ்ஞி போலொரு பெண்குட்டி’ என்ற மலையாள சினிமா மூலம் 2004-ம் ஆண்டு சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். ‘ஸ்ரீ மகா லட்சுமி’ என்ற தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் பிற மொழி சினிமாக்களிலும் பிரவேசித்தார். பரத் கதாநாயகனாக நடித்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற சினிமா மூலம் 2008-ல் தமிழில் … Read more

பீலே இறந்தது தெரியாமல் இன்னமும் காத்திருக்கும் அவரது 100 வயது தாயார்

கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே இறந்தது இன்னமும் அவரது தாயாருக்கு தெரிவிக்கப்படவில்லை என சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார். பீலேவின் 100 வயதான தாயார் ஜாம்பவான் பீலேவின் தாயார் 100 வயதான செலஸ்ட்டை அவரது மகள் மரியா லூசியா என்பவரே கவனித்து வருகிறார். இவரது இல்லத்தில் தான் இறுதிச்சடங்குகளுக்கு முன்னர் பீலேவின் உடல் வைக்கப்படுகிறது. இதன் பின்னர் உலகின் மிக உயரமான கல்லறையில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால், மரிய லூசியா இதுவரை பீலே இறந்தது தொடர்பில் தமது … Read more

நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்வர் கூறியுள்ளார். பட்டாசு வெடி விபத்தில் இறந்த தில்லைக்குமார், பிரியா, செல்வி, பெரியக்காள் ஆகியோர் குடும்பங்களுக்கு முதலவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரசவித்த தாய் உயிரிழந்த சோகம்; மருத்துவர்கள் கவனக்குறைவே காரணம் என உறவினர்கள் போராட்டம்!

பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர்கள் கவனக்குறைவாக சிசிக்கை அளித்ததே அவரது மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் அந்த அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேராவூரணி அருகே உள்ள மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் விவசாயக்கூலி தொழிலாளி. இவரின் மனைவி நீவிதா (23), ஏற்கெனவே பெண் குழந்தை … Read more

மெஸ்ஸி vs ரொனால்டோ: 2023 ஜனவரியில் காத்திருக்கும் சம்பவம்! இந்த நூற்றாண்டில் முதல்முறையாக மோதும் ஜாம்பவான்கள்

2023 ஜனவரியில் மெஸ்ஸி, ரொனால்டோ நட்பு ரீதியாக விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2023-ஆம் ஆண்டில் இரண்டு வெவ்வேறு கண்டங்களில் விளையாடுகிறார்கள். மெஸ்ஸி தனது ஒப்பந்தத்தை பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) ஒரு வருடத்திற்கு நீட்டித்த நிலையில், ரொனால்டோ சவுதி அரேபிய கிளப் அல் நஸ்ருடன் (Al Nassr) இரண்டரை வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நூற்றாண்டில் முதல்முறை இருப்பினும், ஜனவரி 19 அன்று அல் நஸ்ர் மற்றும் அல் ஹிலாலின் ஒருங்கிணைந்த … Read more

துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது…

அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அட்டகாசமான நடிப்பில் ‘துணிவு’ படத்தின் மூலம் தனது ரசிகர்களை மீண்டும் அமர்க்களப் படுத்தி இருக்கிறார் அஜித். Gangs, guns, mind games, and money🔥#ThunivuTrailer OUT NOW – https://t.co/mPfG9x0Kez#ThunivuPongal #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @kalaignartv_off @NetflixIndia @SureshChandraa #RomeoPictures @mynameisraahul pic.twitter.com/gZxRQkPjPG — Zee Studios South (@zeestudiossouth) December 31, 2022 மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் … Read more

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது

நியூசிலாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி உற்சாகம் அடைந்தனர். புத்தாண்டையொட்டி வண்ண விளக்குகளால் ஆக்லாந்து நகரம் ஜொலிக்கிறது.