தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரூ.7500 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது: அமைச்சர் உதயநிதி பேச்சு

திண்டுக்கல்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரூ.7500 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது என பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். நான் இளைஞரணி செயலாளரான பிறகு முதல் முதலாக பேராசிரியர் அன்பழகனிடம் தான் ஆசி பெற்றேன் என அமைச்சர் உதயநிதி கூறினார்.

அனுமன் ஜயந்தி: அனுமனை வழிபட்டால் ஆயுளும் ஆரோக்கியமும் நீளும்! புராணம் சொல்லும் தகவல்கள்!

“ஸ்ரீ ராமா” என்று எங்கு கேட்டாலும் உடனே ஓடி வருபவர் அனுமன். பக்தியில் அனுமனை போல் நீங்காமல் இருக்க வேண்டுமென்று கூறுவர். அனுமன் ஜெயந்தியில் அனுமனின் கதையையும் காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வணங்குவோம். அனுமன் தரிசனம் அனுமன் ஜயந்தி: அனுமன் பிறந்த தினமே அனுமன் ஜயந்தி. அஞ்சனையின் மகனான இவர், பிறந்ததே மகத்தான கதை. தேவர்களின் குருவான பிருஹஸ்பதிக்கு புஞ்சிகஸ்தலா என பெயர் கொண்ட ஒரு உதவியாளர் இருந்தாள். அவள் ஒரு பெண் குரங்கின் தோற்றத்தோடு பிறப்பெடுக்க … Read more

FIFAவின் புதிய கால்பந்து தரவரிசை பட்டியல்! சாம்பியன் ’அர்ஜென்டினா’ 2வது இடம்! முதலிடம் யார்?

சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அர்ஜென்டினா 2வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் சமீபத்தில் உலக சாம்பியன் பட்டத்தை 3-வது முறையாக கைப்பற்றிய அர்ஜென்டினா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் 4-ல் இருந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளது. Twitter கால்இறுதியுடன் வெளியேறிய போதிலும் பிரேசில் ‘நம்பர் ஒன்’ இடத்தை … Read more

புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி  தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, அரையாண்டு விடுமுறையில் வருவதால், ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதுபோல தெற்குரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த நிலையில்,  ஆங்கில புத்தாண்டையொட்டி தாம்பரம்த்தில் இருந்து நாகர்கோவில் வரை  இயக்கப்பட  உள்ள சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் பண்டிகை கால … Read more

ட்விட்டரின் புதிய அப்டேட்: இனி, ஒவ்வொரு ட்வீட்டையும் எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என அனைவரும் காணலாம்!

கலிபோர்னியா: இனி, ஒவ்வொரு டிவிட்டையும் எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என அனைவரும் காணும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிவிட்டும், பெறுகிற லைக்குகளை விட 100 மடங்கு பார்வைகளை பெறுவதாக டிவிட்டர் சி.இ.ஓ. எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

“நான் பாஜக-வில் இணையவில்லை; திமுக-வில்தான் நீடிக்கிறேன்" – தோப்பு வெங்கடாசலம் விளக்கம்

2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்துக்கு, ஜெயலலிதா வாய்ப்பளித்தார். மேலும், அந்த தேர்தல் பிரசாரத்துக்காக பெருந்துறை வந்த ஜெயலலிதா, இங்குதான் அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக ஆனாலும், அப்போதைய அமைச்சரவையில் … Read more

ஐபிஎல்2023 போட்டிக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் தொடங்குகிறது…

கொச்சி: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் இன்று பிற்பகல் தொடங்குகிகறது. இதில், முக்கிய வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியாவில், இதுவரை   15 சீசன் நடைபெற்றுள்ளது. இதில், சிஎஸ்கே அணி 13 முறை ஆடியுள்ளது. அதில் 4 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதுமட்டுமின்றி,  11 முறை பிளே ஆப் சுற்றுக்கு … Read more

பிரபல திரைப்பட நடிகர் காலமானார்! கமல்ஹாசன், சத்யராஜ் படங்களில் நடித்தவர்

பிரபல திரைப்பட நடிகர் கைகலா சத்யநாராயணா தனது 87வது வயதில் காலமானார். தமிழ் திரைப்படங்களிலும் நடித்த கைகலா சத்யநாராயணா தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக திகழ்ந்தவர் கைகலா சத்யநாராயணா. இவர் தயாரிப்பாளர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார். தமிழிலும் நடிகர் கமல்ஹாசனுடன் பஞ்சதந்திரம், சத்யராஜுடன் பெரியார் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சத்யநாராயணா இன்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார் என அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். indiatoday பல்வேறு … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,066-க்கும் சவரன் ரூ.40,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எங்கள் உரிமை: இன்று (டிச.23) தேசிய விவசாயிகள் தினம்| Our Right: Today (Dec 23) is National Farmers Day

இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. விவசாயத்திற்காக பல சட்ட திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவாக அவரது பிறந்த தினமான டிச.23ல் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மக்களின் பசியை போக்க உணவை படைத்து வரும் விவசாயிகள் போற்றத்தக்கவர்கள். இருப்பினும் பல்வேறு காரணங்களால் இன்றைய சூழலில் விவசாய தொழில் சவாலான ஒன்றாக மாறி வருகிறது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களின் பிரதான … Read more