மின்சார திருட்டுக்கு 18 ஆண்டு சிறையா? மனுதாரரை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்!| Dinamalar

புதுடில்லி மின்சார திருட்டு வழக்கில் வழங்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் இக்ரம். இவர் மின்சார திருட்டில் ஈடுபட்டதாக, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனை கடந்த 2019ல் இவர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2020ல் தண்டனையை அறிவித்தது. அதில், ஒவ்வொரு வழக்கிலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அனைத்தையும் அவர் தனித்தனியாக … Read more

"சீனா போருக்கு தயாராகி வருகிறது" – ராகுல் காந்தி கருத்து

ஜெய்ப்பூர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது … Read more

“போருக்குத் தயாராகும் சீனா; தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா!" – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லையில், சீனா அத்துமீறி நுழைந்ததாக இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே தாக்குதல் நடந்த விவகாரம் இன்றுவரை பேசுபொருளாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவின் ஊடுருவலை இந்திய வீரர்கள் முறியடித்துவிட்டனர் என்றும், தாக்குதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர் என்றும் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார். இந்தியா – சீனா அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், `மோடி அரசின் சிவப்புக் கண்களை சீனக் கண்ணாடிகள் மறைத்துக்கொண்டிருக்கின்றன’ என மாநிலங்களவை … Read more

ஜேர்மனியில் ஐரோப்பாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயுக் குழாய்கள் அமைக்கும் பணி துவக்கம்

ஜேர்மனியின், ஏன் ஐரோப்பாவின் முதல் ஹைட்ரஜன் எரிவாயுக் குழாய்கள் அமைக்கும் பணி இந்த வாரம் ஜேர்மனியில் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 900 கிலோமீற்றர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் ஜேர்மன் நகரமான Leipzigஐ மையமாகக் கொண்டு இயங்கும் Ontras என்ற நிறுவனம், 2030ஆம் ஆண்டு வாக்கில் 900 கிலோமீற்றர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை பெடரல் பொருளாதாரத்துறையும், அதனுடன் இணைந்து செயல்படும் Saxony மாகாண பொருளாதாரத்துறையும் வெளியிட்டுள்ளன. … Read more

உலகிலேயே மிகவும் உயரம் குறைந்தவர்: கின்னஸ்சாதனை படைத்தார் ஈரானை சேர்ந்த ஆப்சின்

ஈரான்: உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆப்சின் என்ற 20வயது இளைஞர். உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஏற்கனவே  கொலம்பியாவைச் சேர்ந்த Edward ‘Niño’ Hernandez (36) என்னும் நபர் இடம் பிடித்திருந்தார். அவரை விட ஆப்சின் (Afshin) 7 சென்டி மீட்டர் உயரம் குறைந்தவர் என்பதால், தற்போது இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவரது … Read more

மதுரை அருகே போலி பெண் மருத்துவர் கைது

மதுரை: மதுரை ஸ்ரீராம்நகர் பகுதியில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த யோகசரஸ்வதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் அளித்த புகாரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2022-ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு 'பிரியாணி' – ஸ்விகி வெளியிட்ட தகவல்

புதுடெல்லி, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. … Read more

குடித்துவிட்டு மணமேடைக்கு வந்த மணமகன்; கடைசி நேரத்தில் மணமகள் கொடுத்த அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியில், சஃபிபூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணும், கான்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞனும் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர். அப்போது மணமேடையில் மணப்பெண் நின்றுகொண்டிருக்க, மணமகனோ போதையில் தள்ளாடிய நிலையில் வந்திருக்கிறார். இதன்மூலம் மணமகன் மது அருந்தியிருப்பதை உணர்ந்த மணமகள், மாலைகளை இருவரும் மாற்றிக்கொள்வதற்கு முன்பாக தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என துணிச்சலாக மேடையிலிருந்து இறங்கிவிட்டார். திருமணம் இரு வீட்டாரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், “தன்னுடைய சொந்த திருமண நாளிலேயே … Read more

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. கடல் அருகே உள்ள பார்வையிடும் தளம் மட்டும் மழைக்காலம் முடிந்த பிறகு சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என மாநகராட்சி தகவல்

"அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது"- புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் … Read more