தலைப்பு செய்திகள்
இத்தாலி பிரதமரை முதல் முறையாக நேரில் சந்தித்த ட்ரூடோ! எடுத்த முக்கிய முடிவுகள் என்ன?
ஜி20 மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோர் முதல் முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இத்தாலி பிரதமருடன் முதல் சந்திப்பு இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி20 உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை சந்தித்தார். உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட சில விடயங்கள் … Read more
அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் கைது
தேனி: அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. தேனி மாவட்டத்தில் 2017-19 வரை சுமார் 180 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர் பெயரில் பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்தது. மெகா நில மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய நபரான வட்டாட்சியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை பல்கலையில் மகளிர் :நீதிமன்றத்தில் அரசு பதில்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி ;நம் கடற்படை பல்கலையில் சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பெண்கள் சேருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.கடற்படை பல்கலையில் பெண்கள் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் பெண்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்களை பல்கலையில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விளக்க மத்திய அரசுக்கு உத்தரவிட … Read more
World War III: திடீரென ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்; போலந்து மீது ஏவுகணைத் தாக்குதல் – பின்னணி என்ன?
NATO – நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேரவுள்ளதை அறிந்த ரஷ்யா, உக்ரைன் மீது அறிவிக்கப்படாத போரை நடத்திவருகிறது. கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் ‘ரஷ்யா- உக்ரைன்’ இடையேயான இப்போரின் பாதிப்பால் ஏராளமான உக்ரைன் நாட்டு மக்கள் தங்களின் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இப்போரில் தங்கள் உயிர்களை, உறவுகளை, உடமைகளை, கல்வியை இழந்து தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி போரினால் இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. … Read more
குறட்டை விடாமல் நிம்மதியாக தூங்கனுமா? இந்த மூன்று பயிற்சிகளை மறக்கமால் செய்து பாருங்க.. விரைவில் பலன் தரும்!
இன்றைக்கு பலருக்கும் குறட்டை பிரச்சினை ஒரு முக்கியப்பிரச்சினையாக உள்ளது. குறட்டை விடுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று நாக்கு தான். நாக்கு தூங்கும்போது பின்னோக்கி செலவதால் தொண்டைப் பகுதியில் உள்ள சுவாசக் குழாயின் மூச்சு சீரில்லாமல் சென்று குறட்டை உண்டாகிறது. இதனை ஒரு சில எளியபயிற்சிகளை மூலம் சரி செய்யலாம் அவை என்ன என்பதை பார்ப்போம். Image Credit: tommaso79/Shutterstock.com பயிற்சி 1 முதலில் உங்கள் நாக்கின் நுனியால் மேலண்ணத்தை தொடவேண்டும். பின்னர் பின்னோக்கி நாக்கின் … Read more
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம்! கமல்ஹாசன்…
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தகூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தோம், ஆனால், அதுகுறித்து விவரிக்க முடியாது என செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் தெரிவித்து உள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே திட்டங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, நடிகர் கமல்ஹாசனும், தனது கட்சியின் நடவடிக்கை குறித்து இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதன்படி … Read more
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, மீனவர்கள் 14 பேரையும் காரைநகர் முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
`ஆப்சென்ட் ஆன புதின் முதல் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா வரை..!' – ஜி-20 உச்சிமாநாடு ஹைலைட்ஸ்
ஜி-20 மாநாடு ஜி-20 அமைப்பின் மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி நகரில் நேற்று, இன்று இரண்டு தினங்களாக நடைபெற்றது. ஜி-20 மாநாடு பிரதமர் மோடி, ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ, ஜி ஜின்பிங் உட்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யா சார்பில் புதினுக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். ஜி-20 மாநாடு இந்த மாநாட்டின் மூலம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் பதவியேற்ற நாளிலிருந்து முதன்முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் … Read more
ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார் இந்தோனேசியா பிரதமர் ஜோகோ விடோடோ…
பாலி: இந்தோனேசியா தலைநகர் பாலியில் நடைபெற்ற 2நாள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. இந்தோனேசியாவின் பாலி நகரில் 2 நாள் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட 20 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். ரஷ்ய அதிபர் புடின் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக … Read more