6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை..!!

ராமநாதபுரம்: 6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளனர். 2 நாட்களாக தனுஷ்கோடி அடுத்த மணல்திட்டில் தவித்த இலங்கை தமிழர்கள் 5 பேரை மரைன் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இன்று(அக்.,7) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியதுமே, ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். … Read more

ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்ற 3 மாணவர்கள் மின்னல் தாக்கி காயம்

கந்தமால், ஒடிசாவில் 3 மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்காக அருகிலுள்ள மலை உச்சிக்கு சென்றனர். அங்கு படித்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர். மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 185 கிமீ தொலைவில் உள்ள முண்டகம் கிராமத்தில் இணைய இணைப்பு இல்லாத காரணத்தால் மாணவர்கள் நேற்று பிற்பகல் ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்றனர். மலை உச்சிக்கு சென்றால் தான் இணைய இணைப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் அங்கு சென்றனர். இந்த நிலையில் மாலையாகியும் மாணவர்கள் வீடு … Read more

“நான் கேட்டபோதே என்னுடன் அனுப்பிருந்தால் என் மகன் உயிரோடாவது இருந்திருப்பான்!" – கதறும் தாய்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகமான விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. செந்தில்நாதன் என்பவர் இந்த காப்பகத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, இங்கிருந்த 15 சிறுவர்களில் ஒருவன் மட்டும் ஊருக்குச் சென்ற நிலையில், காப்பகத்தில் 14 சிறுவர்கள் இருந்திருக்கின்றனர். குழந்தைகள் காப்பகம் சிறுவர்கள் சிலருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை காய்ச்சல் இருந்திருக்கிறது. இதற்காக காப்பக நிர்வாகிகள் மாத்திரை கொடுத்திருக்கின்றனர். … Read more

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல… வெளிவரும் புதிய பின்னணி

பொதுவாக நடிகர்கள் தங்கள் உண்மையான பெயரை மேடையிலும் திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை மேகனும் சரி இளவரசர் ஹரியும் சரி, இருவருமே தங்கள் சட்டப்பூர்வமான பெயரில் அறியப்படுவதில்லை. பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் மேகன் இல்லை என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்துகொண்டதன் வாயிலாக, அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கல், உலக நாடுகள் அனைத்தும் அறியப்படும் ஒரு குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானார். @getty … Read more

3 குழந்தைகள் உயிரிழந்த திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் இன்று தமிழகஅரசின் குழு விசாரணை…

சென்னை: திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். ,இந்த விவகாரம் தொடர்பாக தமிழகஅரசின் சமுக நலத்துறை அமைத்துள்ள குழுவினர் இன்று அங்கு சென்று விசாரணை நடத்துகின்றனர். திருப்பூரில் திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம்  குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட காவலாளி மற்றும் 11 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள … Read more

சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த இளைஞர்கள் கைது..!!

சேலம்: சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த இளைஞர்கள் நவீன், சஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த புகாரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முற்றுகை| Dinamalar

புதுச்சேரி: நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகளில் பலர் நடை பாதைகளை ஆக்கிரமித்து கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர்.அண்ணா சாலையில் உள்ள நடைபாதை கடை ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் நேற்று காலை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு … Read more

பாலக்காடு அருகே பயங்கர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உள்பட 9 பேர் சாவு

பாலக்காடு, இந்த கோர விபத்து குறித்த தகவல்கள், நெஞ்சை நொறுக்கு வதாக அமைந்துள்ளன. அவை வருமாறு:- ஊட்டிக்கு சுற்றுலா கேரள மாநிலம், எர்ணாகுளம் பள்ளுருத்தி பேசிலோஸ் வித்யநிகேதன்பள்ளிக்கூடத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 42 பேர், 5 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டிக்கு ஒரு தனியார் பஸ்சில் உல்லாச சுற்றுலா புறப்பட்டனர். பஸ்சை டிரைவர் ஜோமோன் ஓட்டினார். ஒரு உதவி டிரைவரும் உடன் இருந்தார். ஊட்டியை உற்சாகமாக வலம் … Read more

“புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்…. அவர் உயிரைக்கூட பாதுகாக்க முடியாது!" – உக்ரைன் அதிபர்

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. உக்ரைனின் நான்கு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா அவற்றைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்தது. மேலும், தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்திருக்கிறது ரஷ்யா. இந்த நிலையில், சிட்னியிலுள்ள லோவி இன்ஸ்டிடியூட் சர்வதேச சிந்தனைக் குழுவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். ஜெலன்ஸ்கி அப்போது அவரிடம் அணு ஆயுதப் போரின் அபாயம் அதிகரித்துள்ளதா எனக் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த … Read more