காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும்,   வரும் 20ம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு … Read more

திருச்சி முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

திருச்சி:திருச்சி முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 4 பேருக்கும் பாஸ்போர்ட் கிடைத்தால்தான் அவர்கள் விருப்பும் நாடுகளுக்கு அனுப்ப முடியும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

கல்குவாரி விபத்து: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி – மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா, மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். … Read more

“குவாரிகள மூடுற வரைக்கும் ஓயமாட்டோம்..!" – கிராமத்தை காலிசெய்து கொரட்டகிரி மக்கள் போராட்டம்

சிறு மலைகளால் சூழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல் குவாரிகளுக்கு பஞ்சமில்லை. மாவட்ட நிர்வாக தகவலின்படி, கற்கள், கருப்பு கிரானைட், பல வண்ண கிரானைட் எடுக்கும் குவாரிகள், 240-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான குவாரிகளில் அரசு விதிமுறைகள் துளியும் மதிப்பதில்லை, அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக ‘கல்லா’ கட்டுகின்றனர் என்பது மக்களின் நீண்டகால புகாராக இருக்கிறது. இந்த நிலையில், ‘குவாரிகளால் நிம்மதியாக வாழ முடியவில்லை,’ எனக் கூறி, கிராமத்தை காலி செய்து, 2 கி.மீ., தொலைவில் டென்ட் அமைத்து, … Read more

அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை! தமிகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என தமிகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில்  கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தவறு ஏற்பட்டதன் காரணமாக, இளம்வீராங்கனை பிரியா உயிரிழந்தார். இது அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது கடுயைமையான விமர்சனங்களை  ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர், … Read more

நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை முதல் ஜன.20ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்களே: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு| Dinamalar

சுர்குஜா: இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்துத்துவம் தான் உலகில் அனைவரையும் அழைத்து செல்வதை நம்புகிறது. இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்ட 1925ல் இருந்தே கூறி வருகிறோம். மதம், கலாசாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை தங்கள் தாய் மண்ணாக கருதி, … Read more

மராட்டியத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் காவலர் தூக்கு போட்டு தற்கொலை..!

மும்பை, மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரவீன் விஸ்வநாத் கடம் என்பவம் இன்ஸ்பெக்டராக துலே மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். வருகிற நவம்பர் 21-ந்தேதி போலீஸ் பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மதியம் இதற்கான ஏற்பாடுகளில் பிரவீன் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று … Read more

Kieron Pollard: `மும்பையின் யாதுமானவர்' – CSK-க்கு மட்டுமல்ல அத்தனை பேருக்குமே அவர் Nightmareதான்!

உடைவாளை ஒப்படைத்து, ஒதுங்குவதாகச் சொன்ன சேனைத் தலைவனை ராஜகுருவாக்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். டி20 லீக் அணிகளுக்கும் அதனுடன் பயணிக்கும் வீரர்களுக்குமான நட்பு, பொதுவாக ரயில் ஸ்நேகம்தான். அதன் ஆயுட்காலம் சொற்பமே. தேசிய அணிகளில் ஆடும் வீரர்களின் மீது ஏற்படும் அதிதீவிர அபிமானம், அவர்கள்மீதும் அரும்புவதுகூட அரிதுதான். ஆனால், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக மும்பை அணியின் முதுகெலும்பாகப் பொல்லார்டுதான் வலம் வந்திருக்கிறார். அதுவும் அவர்மீதான ரசிகர்களின் நேசமோ அளப்பரியது. 2010-ல் மும்பையின் கரை தொட்டு இந்தக் காட்டாறு ஓடத் … Read more

இனி ‘ட்ரூ காலர்’ தேவையில்லை: விரைவில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது ‘டிராய்’…

டெல்லி: தங்களுடன் பேசுபவர் யார் என்பதை அறிய பெரும்பாலோர் ட்ரு காலர் என்ற செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்திய தகவல் தொலை தொடர்பு ஆணையமான டிராய் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.  எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயர் நமது தொலைபேசி திரையில் தெரிய டிராய் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான பயனர்கள், Truecaller ஐ தங்கள் தொடர்புத் தேவைகளுக்காக நம்புகிறார்கள், இது அழைப்பவர் ID அல்லது … Read more