தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தெண்டு இலைகள் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தெண்டு இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீடி சுற்றுவதற்கான தெண்டு இலைகளை மூட்டை மூட்டையாக இலங்கைக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டது. இந்திய கடலோர காவல்படையினர் வஜ்ரா கப்பல் ரோந்து சென்றபோது பீடி இலைகளை  ஏற்றிவந்த படகை மறித்து பறிமுதல் செய்தது.   

தகவல் உரிமை சட்டத்தில் தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2000 நோட்டினை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து ரூ.2000 நோட்டும், புதிய வடிவிலான ரூ.500 நோட்டும் ரிசர்வ் வங்கியால் … Read more

தருமபுரி: கண்டிப்பை மீறியும் திருமணம் மீறிய உறவை தொடர்ந்த தந்தை! – ஆத்திரத்தில் மகன்கள் வெறிச்செயல்

தருமபுரி மாவட்டம், புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55) விவசாயி. இவரின் மனைவி கந்தம்மாள் (45). இவர்களுக்கு பிரவீன்குமார் (30), ரஞ்சித்குமார் (28) என இரு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், இருவரும் சில வாரங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கந்தம்மாள் மகன்களுடன் வீட்டிலும், கிருஷ்ணன் வயலிலும் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், கிருஷ்ணன் வயலுக்கு அருகே, வெட்டுக் காயங்களுடன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு … Read more

10ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேஷிய விமானம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது…

கோலாலம்பூர்: 10ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புதிய தகவ்லகள் வெளியாகி உள்ளன. அந்த விமானம்,  விமானிகளால்,  திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற மலேஷிய விமானம், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 2ந்தேதி நடுக்கடலில் காணாமல் போனது. இந்த விமானத்தில் 22 பேர் இருந்தனர்; அவர்களில்  பலர்,  சீனாவைச் சேர்ந்தவர்கள். மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. … Read more

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம், நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணச் சட்டத்தில் கையெழுத்திட்ட பைடன்|பெருவில் வெடித்த கலவரம்- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

தன்பாலின திருமணச் சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பெரு நாட்டில் நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலையால், கலவரம் வெடித்திருக்கிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் டி.பி.ஜி டெலிகாம் நிறுவனத்தின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பயனாளிகளின் கிரிப்டோகரன்சி, நிதிநிலை குறித்த தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ஹாரி & மேகன் தம்பதியின் ஆவணப்படம், அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு வருகிறது. வெளியாகிய ஒரே வாரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற … Read more

காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 18-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு ….

சென்னை: காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 18-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த உள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 18-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் … Read more

உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்! வெளியான தகவல்

ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் கீவ் நகரில் ஐந்து கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற மக்கள்தொகை மையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. இந்த நிலையில் ரஷ்யா கீவ் நகரில் ட்ரோன்கள் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நகர நிர்வாக தலைவர் Serhii Popko இதுகுறித்து கூறுகையில், ட்ரோன்களின் துண்டுகள் ஒரு நிர்வாக கட்டிடத்தை சேதப்படுத்தியது மற்றும் நான்கு குடியிருப்பு கட்டிடங்கள் சிறிய … Read more

மேட்டுப்பாளையம் – குன்னூர் – ஊட்டி இடையே இரு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து: சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் கல்லாறு – குன்னூர் இடையே பல இடங்களில் மரங்கள், பாறைகள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்து உள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாததால் 15, 16 ஆகிய இருநாட்கள் மேட்டுப்பாளையம் – குன்னூர் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலைரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் குன்னூர் – ஊட்டி இடையே வழக்கம் போல் இயங்கும் எனவும் சேலம் கோட்ட … Read more

எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் பத்திரமாக மீட்பு: மத்திய உளவுத்துறை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முடக்கப்பட்ட 5 இணைய சா்வா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது என மத்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 22-ம் தேதியன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு தீடீரென சர்வர் முடங்கியது. விசாரணையில் எய்மஸ்சின் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, ‘சர்வர்’ ஆகியவற்றை முடக்கும் விதமாக, ‘ஹேக்கர்’கள் ‘சைபர்’ தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் உலகம் … Read more