சீர்காழி சரஸ்வதி கோயில்: கல்வியறிவை வழங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் சரஸ்வதிவிளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யாநாயகி சமேத ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் வீற்றிருக்கும் பழைமை வாய்ந்த கோயிலில் சரஸ்வதிதேவி தனிச் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டித் தவமிருந்து அருள் பெற்றதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர், ‘சரஸ்வதிவிளாகம்’ என்றழைக்கப்படுகிறது. சரஸ்வதி பூஜை சரஸ்வதிதேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமியும், அம்பாளும், ஸ்ரீவித்யாரண்யேஸ்வரர், ஸ்ரீவித்யாநாயகி என்ற … Read more