மறைமலை முதல் கூடுவாஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: மறைமலை முதல் கூடுவாஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக  வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அணுகு சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பெரியம்மாவின் புறம்பேச்சு, அக்காவின் பொறாமை; காயப்படுத்துபவர்களை கையாள்வது எப்படி? #PennDiary88

எங்களுடையது மிகவும் ஏழ்மையான கிராமத்து குடும்பம். நான், தம்பி என வீட்டில் இரண்டு பிள்ளைகள். நான் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கல்லூரியில் படிக்கவைக்க வீட்டில் பொருளாதார வசதி இல்லை. எனவே, நகரத்தில் இருந்த பெரியம்மாவிடம் என் அம்மா, தங்கள் பெற்றோரது பூர்விக வீட்டில் தனது பங்கையும் அவரையே எடுத்துக்கொள்ளச் சொல்லியும், பதிலுக்கு என்னை அவர்கள் வீட்டில் தங்கவைத்து, கல்லூரிப் படிப்புக்கான கட்டணத்தை கட்டும்படியும் கேட்டுக்கொண்டார். அவ்வாறே, நான் பெரியம்மா வீட்டில் தங்கி என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். … Read more

மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5.93 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மும்பை பயணிகள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய மற்றொரு பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.

ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விவகாரம்: 10 பேர் கைது| Dinamalar

பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 23 வயது டெங்கு நோயாளிக்கு டிரிப்ஸ்சில் பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் கலந்து ரத்தத்தில் ஏற்றியுள்ளனர். இதன் காரணமாக நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, அரசு உத்தரவின் பேரில் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் போலி பிளேட்லெட் கடத்தி விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள … Read more

குட்டி இளவரசி சார்லட்டின் அறையில் ஆவிகள்… பாதுகாக்கும் டயானா: வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் மகளான குட்டி இளவரசி சார்லட்டின் அறையில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த இளவரசி டயானாதான் சார்லட்டை பாதுகாக்கிறாராம். ஆவிகளுடன் பேசும் பிரபலமான Jasmine Anderson என்பவர், இளவரசர் வில்லியம் தனது குடும்பத்துடன் வாழும் வீடு அவ்வளவு சரி இல்லை என்று கூறியுள்ளார். குறிப்பாக குட்டி இளவரசி சார்லட் வாழும் அறையில் ஆவிகள் நடமாட்டம் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இளவரசி சார்லட் மீது … Read more

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் 2.45 லட்சம் பேர் பயணம்

சென்னை: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் நேற்று முதல் இன்று மாலை வரை 2.45 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு 1,065 பேருந்துகளும், 407 சிறப்பு பேருந்துகளும் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க அரசு உறுதி: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டில் மக்கள் அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ம.பி.,யில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா -கிராமின் (பிஎம்ஏஓய்-ஜி ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்த வீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் காஸ் இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும். பயனாளிகளின் … Read more

நீலகிரி: காரில் கடத்தல்; ஆட்டோவில் சப்ளை – 1,000 பாக்கெட் குட்காவுடன் சிக்கிய நபர்! நடந்தது என்ன?!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நீலகிரி வழியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. நீலகிரியிலும் குட்கா புழக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஆட்டோ மூலம் குட்கா பொருட்களை சப்ளை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு!

சென்னை: முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பாது, கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதலமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பொருளாதார … Read more