கெர்சனில் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேக நபர்கள்! வெளியான புகைப்படங்கள்

உக்ரைனின் கெர்சனில் புடின் துருப்புகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட சிலர் உள்ளூர்வாசிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். ரஷ்ய படைகளுக்கு உதவி   கெர்சனை விட்டு ரஷ்யா வெளியேறிய பின்னர், அந்நகரை மீட்டுவிட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்தார். எனினும் நகரத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில ரஷ்யர்கள் இன்னும் இருப்பதாக அச்சம் நிலவியது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்படும் சிலர் கெர்சன் நகர வாசிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கைகள் கட்டப்பட்டு, கண்கள் டேப்பினால் மூடப்பட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் … Read more

பிரிட்டன் நிறுவனத்துடன் டி.வி.எஸ்., ஒப்பந்தம்| Dinamalar

சென்னை :’டி.வி.எஸ்., எஸ்.சி.எஸ்’., நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த, குப்பை சேகரிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனமான ‘டென்னிஸ் ஈகிள்’ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. சந்தைக்கு பின் சேவைக்கான இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டென்னிஸ் ஈகிள் நிறுவனத்துக்கு தேவையான வாகன உபகரணங்களை, தொடர்ந்து வழங்க உள்ளதாகவும் டி.வி.எஸ்., தெரிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அது, 800 கோடி ரூபாயாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. சென்னை :’டி.வி.எஸ்., … Read more

ஜேர்மன் அமைச்சரின் பிள்ளைகளுக்கு கொலை மிரட்டல்

ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார். வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach, தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால், தனியாக வெளியே செல்ல அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது காரை தான் வீட்டுக்கு வெளியே பார்க் செய்வதில்லை என்று கூறும் Lauterbach, தான் இரவில் வெளியே செல்லும்போது தனக்கென தனியாக பாதுகாவலர்களுடனேயே பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனக்குள் அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது … Read more

யானைக்கு பயந்து 8.கி.மீ., ரிவர்ஸ் போட்ட பஸ் டிரைவர்| Dinamalar

திருச்சூர், கேரளாவில், காட்டு யானை துரத்தியதை அடுத்து, டிரைவர் பஸ்சை 8 கி.மீ., துாரத்துக்கு ‘ரிவர்ஸ் கியர்’ போட்டு ஓட்டிய ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில், ௪௦ பயணியருடன் பஸ் ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென எதிர்புறத்திலிருந்து காட்டு யானை ஒன்று பஸ்சை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளது. அது ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய பாதை என்பதால், பஸ்சை திருப்ப … Read more

எங்க டீமை விட்டு என்னை தூக்கிட்டாங்களா? இது யார் பண்ண வேலைன்னு தெரியல..அதிர்ச்சியடைந்த அஸ்வின்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தன்னை விடுவித்ததாக தவறான செய்தியை பரப்பினார்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார். பொல்லார்ட் கொடுத்த அதிர்ச்சி  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒவ்வொரு அணியும் தற்போது சில வீரர்களை அணியில் இருந்து விடுவித்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி கீரென் பொல்லார்ட்டை விடுத்ததாக அறிவித்த பின்னர் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது மும்பை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை … Read more

சபரிமலையில் நேற்று நடை திறப்பு மண்டல பூஜை இன்று தொடக்கம்| Dinamalar

சபரிமலை, :சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. 18 படியேறி வந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றனர். இன்று அதிகாலை 3:00 மணிக்கு மண்டல கால பூஜை துவங்கியது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை ஒரு மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல காலத்துக்காக, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்தார். அடுத்து, 18ம் படி … Read more

கடற்படை பல்கலையில் பெண்கள் நீதிமன்றத்தில் அரசு பதில்| Dinamalar

புதுடில்லி நம் கடற்படை பல்கலையில் சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் பெண்கள் சேருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. கடற்படை பல்கலையில் பெண்கள் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் பெண்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்களை பல்கலையில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விளக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரப்பட்டது. இந்த மனு … Read more

17.11.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 17 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஹலோ ஜெலென்ஸ்கி! நாங்க ஜஸ்டினும், ரிஷி சுனக்கும் பேசுறோம்..கனேடிய பிரதமரின் வீடியோ

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு போன் செய்து பேசுவது போன்ற வீடியோவை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிர்ந்துள்ளார். உக்ரைனுக்கு ட்ரூடோவின் ஆதரவு இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதியைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் ”நாங்கள் உக்ரைன் மக்களுக்காக உறுதியாக துணை நிற்கிறோம்” எனக் கூறினார். … Read more

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். விடுதி டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.