`கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே; இனியும் தமிழக அரசு மூடிமறைக்க முடியாது’- அண்ணாமலை

“கோவை கார் வெடி விபத்தில் உயிரிழந்தவர் வீட்டில் வெடி பொருள்கள்” – டிஜிபி சைலேந்திர பாபுகோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமோசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் ஜமோசா வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருள்கள் கிடைத்தது. மேலும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களும் இறந்தவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை `கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே; இனியும் தமிழக அரசு … Read more

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் பேச்சு| Dinamalar

கார்கில்: கார்கில் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று (அக்.,24) தீபாவளி கொண்டாடினார். பின்னர் உரையாற்றிய அவர், ‛தீபாவளி என்றால் பயங்கரவாதத்தின் முடிவுப் பண்டிகை, கார்கில் அதை சாத்தியமாக்கியது’ என்றார்.மோடி பிரதமராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று எல்லை பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, 2014ல் சியாச்சின் பகுதி, 2015ல் பஞ்சாப் எல்லை, 2016ல் இமாச்சல பிரதேச எல்லை, 2017ல் ஜம்மு-காஷ்மீர் எல்லை, … Read more

பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாட கார்கில் சென்றார் பிரதமர் மோடி…!

லடாக், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் … Read more

"அவங்களை மறக்கத்தான் ஆறு மாசம் இமயமலை போயிட்டேன்!"– பிக் பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ்

பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த அசிம் – ஆயிஷா சண்டையும் அதற்குப் பிறகு ஆயிஷாவைக் கமல் பாராட்டியதும்தான் கடந்த இரண்டு நாள்களாக சின்னத்திரை ரசிகர்களின் ஹாட் டாபிக். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்வானபோதே ’நிச்சயம் கன்டென்ட் தருவார்’ எனப் பலரும் நம்பிய ஒருவர் ஆயிஷா. சீரியல் ஏரியாவில் நுழைந்த நாள்களிலேயே பல சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டதுதான் காரணம். ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநருடன் தகராறு உண்டாகி சீரியலிலிருந்து வெளியேறினார். தவிர, ஆயிஷாவை … Read more

வெள்ளையர்தான் பிரதமராகவேண்டும்: இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மீது இனவெறுப்பு விமர்சனம்

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சில வெள்ளையர்களுடைய மனதிலிருந்து இனவெறுப்பை மட்டும் அகற்றவே முடியாது போலிருக்கிறது. பிரதமர் போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியினர் ரிஷி சுனக் மீது இனரீதியான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒருவர், இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அவரது தோலின் நிறத்தை மேற்கோள் காட்டி, அவர் பிரித்தானியரே அல்ல என்னும் வகையில் பேசிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. LBC … Read more

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஸ்ரீஹரிகோட்டா, வெற்றிகரமாக பறந்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்துள்ள பிரமாண்டமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.3-எம்2), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒன்வெப் இந்தியா-1 நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைகோள்களை இந்த ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. அந்தவகையில் இந்த வகை ராக்கெட்டின் முதல் வணிக பயணம் இதுவாகும். இந்த நிகழ்ச்சிக்குப்பின், … Read more

பிக் பாஸ் 6 நாள் 14 : நடந்தது முதல் எவிக்ஷன்; `அசிம் டு அசல்' வாத்தி ரெய்டு நடத்திய கமல்!

இந்த சீசனின் முதல் எவிக்ஷன் நிகழ்ந்து விட்டது. முத்து தானாக வெளியேறி விட்டதால் ஒருவேளை ‘எவிக்ஷன் இல்லை’ என்று டிவிஸ்டுடன் சொல்வார்களோ என்று கூட மெலிதாக தோன்றியது. இல்லை. சாந்தி மாஸ்டர் முதல் எவிக்ஷனாக வெளியேறியிருக்கிறார். அவரை விடவும் சுமாரான போட்டியாளர்கள் உள்ளே இருக்க, சாந்தி வெளியேறுவது ஒருவகையில் துரதிர்ஷ்டம்தான். (தினமும் மூன்று வேளை உப்புமா செய்து தந்த பாவம்தான், அவரை பலி வாங்கிடுச்சோ?!) குவின்சி நாள் 14-ல் நடந்தது என்ன? ‘சாமி சரணம்..ஐயப்பா..’ என்று பளபளா … Read more

பிரிட்டன் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்… போரிஸ் ஜான்சன் போட்டியிடப்போவதில்லை

பிரிட்னின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராவது உறுதி எனக் கூறப்படுகிறது. லிஸ் ட்ரஸ் பதவி விலகியதை அடுத்து பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி எழுந்த நிலையில் கரிபியன் தீவில் விடுமுறையை அனுபவித்து வந்த ஜான்சன் சனிக்கிழமையன்று லண்டன் திரும்பினார். ஜான்சன் மீண்டும் பிரதமராவதற்கு 100 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர் … Read more

`ஹேப்பி தீபாவளி' – A Film by `கிங்' கோலி!

ஒரு பெரும் பிம்பமுடைய நாயகனும் அவனது எழுச்சியும் இங்கே எப்படி எடுத்தாளப்படுகிறது? கதைகளின் ஆரம்பப்புள்ளியிலேயே அவன் அசாத்தியங்களை நிகழ்த்தி விடுவானா? நிச்சயமாக இல்லை. நாயகனுக்கென்றே சில குறைகள் இருக்கும், அதை நோண்டும் வகையில் எதிர்த் தரப்பிலிருந்து பிரச்னைகள் உண்டாக்கப்படும். நாயகன் தடுமாறுவான், வீழ்வான். எதிராளிகளின் கை ஓங்கும். ஆனால், கதை அத்தோடு முடிந்துவிடாது. நாயகன் கம்பேக் கொடுப்பான். மீண்டெழுவான், சண்டை செய்வான். உச்சக்கட்ட இறுதிக்காட்சியில் இதுவரை வெளிக்காட்டாத உக்கிரத்தை வெளிப்படுத்தி எதிராளிகளை வீழ்த்துவான். இதுபோன்று அவரவர் சிந்தைக்கு … Read more