விரைவில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை – அமைச்சர் பன்னீர் செல்வம்
சென்னை: விரைவில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவிக்கையில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கபடும். சிறப்பு ஊக்கத்தொகையான ரூ. 195 உடன் சேர்த்து டன்னுக்கு ரூ. 2,950 வழங்கப்படும் என்று கூறினார்.