போதைப்பொருள் கும்பலுடன் திமுக எம்.எல்.ஏ-வுக்கு தொடர்பா?- முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகிமீது புகார்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே வேதாளை கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக சொகுசு காரில் கேன்களில் அடைத்து கொண்டு செல்லப்பட்ட மர்ம பவுடரை மண்டபம் மரைன் போலீஸார் வாகனச் சோதனையின்போது கண்டுபிடித்து கைப்பற்றினர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை 19-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சர்பாஸ்நவாஸ், முன்னாள் தி.மு.க கவுன்சிலர் ஜெயினுதீன் ஆகிய இருவரைப் பிடித்து கடத்தப்பட்ட பவுடருடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டிருப்பது போதைப்பொருளா என்பதைக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. … Read more