ஓசி டிக்கெட் விவகாரம்: மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்பி தகவல்

கோவை: அரசு பேருந்தில் ஓசி பயணம் செய்ய மாட்டேன் என கூறிய மூதாட்டி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  அந்த மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவும் செய்யப்படவில்லை மற்றவர்கள்மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு சென்ற அரசு இலவச மகளிர் பேருந்தில் ஏறிய துளசியம்மாள் என்ற மூதாட்டி, தனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம், காசை … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் விவகாரத்து முடிவா? வதந்திகளுக்கு அவர்களின் பதில் இதுதான்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் 6 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் தங்களது கரியரில் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றனர். இதனால் அடிக்கடி தீபிகா படுகோனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் படப்பிடிப்பிலிருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் மும்பை வீட்டிலிருந்த போது இரவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்க இலக்கு! அமைச்சர் நாசர்

ஈரோடு: தீபாவளி பண்டிகையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர்  தெரிவித்தார். ஈரோட்டில் முகாமிட்டுள்ள அமைச்சர் நாசர், அங்குள்ள  ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் ஆலையின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பால்வளத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்றவர்,.  ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் … Read more

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பதிவேடுகளில் பதிவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் சஸ்பெண்ட்

ஈரோடு: ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பதிவேடுகளில் பதிவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த பாலவல்துறை அமைச்சர் 2 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

“அண்ணன் தம்பிகளாகப் பழகும் நம்மிடையே பகைமையை உண்டாக்குகிறார்கள்" – துரை வைகோ காட்டம்

ம.தி.மு.க தலைமை கழக செயலாளர் துரை வைகோ, பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். “மாமனிதன் வைகோ என்கிற படம் திருச்சியில் திரையிடப்பட்டுள்ளது. பெரம்பலூர், கோவை தென் மாவட்டங்கள் எனப் பல மாவட்டங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த இயக்கத்திற்காக உயிர் விட்டவர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்த படம் அவர்களுக்குச் சமர்ப்பணமாக அமையும். துரை வைகோ தேச பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் பா.ஜ.க-வுடன் … Read more

நாசர் குழுவுக்கு எதிராக போட்டியிட்ட கே.பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம்!

சென்னை: நடிகர் சங்க தேர்தலின்போது,  நாசர் தலைமையிலான குழுவுக்கு  எதிராக போட்டியிட்டு, வழக்கு போட்டு, தொல்லை கொடுத்த நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கி, நாசர்  தலைமையிலான நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை பரப்பியதாக கூறி,  நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த  2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் … Read more

மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம்: ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்" – இந்திய வரைப்பட சர்ச்சைக்கு சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இருந்த இந்திய ‘மேப்’பில் காஷ்மீரின் பாதி பகுதிகள் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறாதது ஆளும் பா.ஜ.க-வினரால் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, அந்த பக்கம் சரி செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாரும் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை. எனது குழு செய்த தவறு. தவறு சுட்டிக்காட்டப்பட்டதும் நாங்கள் அதை உடனடியாக சரிசெய்தோம். மேலும், … Read more

கெயில் நிறுவனத்துக்கு அனுமதி: விரைவில் சென்னை, கோவையில் குழாய் மூலம் எரிவாயு சப்ளை…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை யமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் செயல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம், எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணையமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகஅரசு தற்போது  கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் … Read more