ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2.50 கோடி வழங்கினார்…

சென்னை:  அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகஅரசு சார்பில்  ரூ. 2.50 கோடி காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவரிடம் இந்த காசோலை வழங்கப்பட்டது. அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  … Read more

கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அசாமில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு உல்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கவுகாத்தி, அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நேற்று காலை ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தகவலின்படி, நேற்று காலை பயங்கரவாதிகள் பெங்கேரி-திக்பாய் சாலையில் (வனஞ்சல்) ராணுவ வாகனங்களை தாக்குதல் நடத்தினர். ராணுவ அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, ராணுவ வீரர்களும் பதிலடித் தாக்குதல் நடத்தினர், அதன் பிறகு பயங்கரவாதிகள் சுற்றியுள்ள காடுகளில் பதுங்கியிருந்தனர். இருப்பினும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளது. தேடுதல் பணி இன்னும் … Read more

இந்திய மணமகனின் திருமணம்… புடவையில் வந்த நண்பர்கள்; வைரலாகும் வீடியோ!

திருமணங்களில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் கவனத்தைப் பெறுவதில்லை. மாறாக மாப்பிள்ளையின் நண்பர்கள் செய்யும் அலப்பறைகள் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றன. Marriage திருமணத்திற்குப் பின் கறாராக அக்ரிமென்ட் போட்டு வித்தியாசமான கண்டிஷன்களோடு திருமணங்கள் நடைபெறுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிகாகோ மிச்சிகன் அவென்யூவில் நடைபெற்ற இந்திய ஜோடியின் திருமணத்தில், உடை சார்ந்த பாகுபாடுகளை உடைத்து அவர்களின் நண்பர்கள் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.   திருமணத்தின்போது, மணமகன் காத்திருக்க, அவரின் அந்நாட்டு நண்பர்கள் சேலை … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: நவம்பர் 15, 2022

இலங்கை மத்திய வங்கி இன்று (15-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,    அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 96 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 75 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 422 ரூபா 18 சதம் – விற்பனை பெறுமதி 438 ரூபா 85 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 97 சதம் – விற்பனை பெறுமதி 385 ரூபா … Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 1000 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கட்டுமான … Read more

பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் பேட்டி

சென்னை: பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பருவமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு வீடு கட்டித் தரவேண்டும்; அல்லது உரிய இழப்பீடு தர வேண்டும் என வலியுறுத்தினார்.

ராகுல் பாதயாத்திரை கட்சி ஒற்றுமையை ஊக்குவிக்கும்: ஜெயராம் ரமேஷ்

புனே: காங்.,எம்.பி ராகுல் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் எங்கள் கட்சியின் ஒற்றுமையை ஊக்குவிக்கும் என காங்., தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறினார். மஹாரஷ்டிரா மாநிலம் வாஷிம் நகரில் காங்., தலைவர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் மறந்து போன வீடு, வீடாக சென்று தொடர்பு கொள்ளும் நிகழ்வை, இந்திய ஒற்றுமை யாத்திரை ஊக்குவிக்கும். அதிகாரத்தில் இருந்தபோது, அதனை நாங்கள் மறந்து விட்டோம். அதனை, இந்த பாதயாத்திரையின் வழியே தற்போது நாங்கள் நினைவு கூர்கிறோம். … Read more

மராட்டியத்தில் அம்மை நோய்க்கு 2-வது உயிரிழப்பு பதிவு; 126 குழந்தைகளுக்கு பாதிப்பு

மும்பை, மராட்டியத்தின் மும்பை நகரில் அம்மை நோய் பாதித்த ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரில் நல் பஜார் பகுதியில் வசித்து வந்த ஒரு வயது குழந்தை ஒன்று உடல்நலம் பாதித்து கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த குழந்தைக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளை உண்டாக்கியது. இதனால், கடந்த சனி கிழமை, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருந்தது. 2 நாட்களாக சிகிச்சை அளித்த … Read more

எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு… புதிய சாதனை!

எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகை, சென்ற அக்டோபர் மாதத்தில் ரூ. 13,040.64 கோடியாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில் ரூ. 12,976 கோடி ரூபாயாக இருந்த எஸ்ஐபி மூலம் திரட்டப்படும் முதலீடு முதல் முறையாக ரூ. 13,000 கோடியை கடந்துள்ளது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா (AMFI) தெரிவித்துள்ளது. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா (AMFI) கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்… … Read more