20000 புத்தகம் படித்த அண்ணாமலை தன் கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும் – ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேச்சு!
பாஜக-வினர் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேசியுள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலின் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சந்துரு “20000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். “ஏனென்றால் புத்தகங்களை படித்தால் பாசிச கொள்கையை போக்கலாம்” என்று அவர் பேசினார். … Read more