மற்றவர்களின் மனதை புண்படுத்தும் மகளின் குணம், மாற்றுவது எப்படி? #PennDiary87

எங்கள் மகள் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் சிறு வயதிலிருந்தே மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தோம்.நாங்கள் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். பெரு நகரம் ஒன்றில் வசிக்கிறோம். எனவே, அவள் விருப்பங்கள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. அவரை நாங்கள் கடிந்து ஒரு வார்த்தை கூறியதில்லை என்பதுடன், பள்ளி, ட்யூஷன், உறவுகள் என்று அவளை யாராவது கண்டித்தாலும், என் மகளுக்குத்தான் சப்போர்ட் செய்து பேசுவோம். இதனால், அவளுக்கு ஏமாற்றம், கண்டிப்பு, எல்லைகள் என்பவை எல்லாம் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தாள். … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை: ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆசியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இணைய வழி கற்றல் தொகுப்புகள் பதிவேற்றம்| Dinamalar

புதுச்சேரியில் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் தொகுப்புகள் மாநிலப் பயிற்சி மையத்தின் வலைப்பூவில் பதிவேற்றம் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியில் இணையவழி கற்றல் தளத்தை உருவாக்கும் முயற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனமும், மாநில பயிற்சி மையமும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கற்கும் பாடத்தினை எளிய முறையிலும், உற்சாகமூட்டும் விளையாட்டு வழியிலும் கற்பதற்கான வெவ்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய இணைய வழி கற்றல் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய வழி கற்றல் தொகுப்புகள் … Read more

"3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் ஓவர்!"- முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்

டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (16.09.2020) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. நாளை தொடங்கும் இத்தொடர் நவம்பர் 13-ம் தேதி வரை நடைப்பெற இருக்கிறது. இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் … Read more

காதலிக்க கோரி மைனர் பெண்ணை மிரட்டியவர் கைது

சென்னை: தன்னை மீண்டும் காதலிக்க வலியுறுத்தி மைனர் பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மைனர் பெண்ணை மிரட்டிய மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா திருப்திக்கு என்ன வழி? மாத்தி யோசி கதைகள் – 4

ஜமா ஜூஸ் பாயின்ட். ஆனால் எல்லா உதடுகளும் சுருக்கமாக உச்சரிப்பது JJ. நல்வாய்ப்பாக, இந்தக் கடை, ஒரு கல்லூரிக்கும் தியேட்டருக்கும் அருகே இருந்தது. அதனால் மாலை 5 மணி வரை மாணவர் கூட்டம். அதன்பின் தியேட்டருக்கு வருபவர்களின் வருகை. “ஜமா” – இளவட்டங்களில் சொல்லாடல். நாம் எல்லோருமே வாலிப வயதைக் கடந்துதானே வருகிறோம். அதனால் கடையின் பெயர் மக்களின் மனதில் “பசக்”கென்று பதிந்தது. ஜூஸ் வகைகள் பல்கலைக்கழகத்தில் சம்பளம் போட பணமில்லை..! `மாத்தி யோசி’ பிசினஸ் கதைகள் … Read more

நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் புதிய மசோதாக்கள் மற்றும் பல திட்டங்கள், அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நாளை அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்படி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதன்படி, நாளை மாலை 5மணிக்கு  ராயப்பேட்டையில் … Read more

உதகை அருகே விதிகளை மீறிய 22 சொகுசு விடுதிகளுக்கு சீல்..!!

நீலகிரி: உதகை அருகே விதிகளை மீறிய 22 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. உல்லத்தி ஊராட்சியில் சொகுசு விடுதிகள் செயல்பட்டு வந்தன. வருவாய் துறை அதிகாரிகள் சொகுசு விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.

கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தின விழா| Dinamalar

புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது நிறுவன தின விழா நடந்தது. மாணவர் பேரவை தலைவி சரிகா வரவேற்றார். நிறுவனத்தின் புல முதல்வர் செழியன் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். அதில், நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகள் குறித்தும், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். மேலும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடு … Read more

ஸ்டாலின் அஞ்சும் அளவுக்கு தமிழக பாஜக வளர்கிறதா? – அண்ணாமலை கருத்தும் நிலவரமும்!

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, “சமீபத்தில் திமுக-வின் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியதை நாம் கேட்டோம். பாஜக என்ற கட்சியே தமிழகத்தில் இல்லவே இல்லை என்று 5 ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய ஸ்டாலின், இன்று பாஜக தங்களது முதல் எதிரியாக அவராகவே அறைகூவல் விடுத்துள்ளார். அதை பார்க்கும்போதே பாஜக தமிழகத்தில், தமிழக மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். எப்போதும் … Read more