நெல் ஈரப்பதம் 22%-ஆக உயர்த்துவது குறித்து நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு

நாகை: நெல் ஈரப்பதம் 22%-ஆக உயர்த்துவது  குறித்து நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களுக்கு  சென்று நெல் சேகரித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 2,401 ஆக சரிவு!| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,401 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: * இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,401 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆனது. * கடந்த 24 மணி நேரத்தில், 2,373 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,73,308 ஆனது. தற்போது 26,625 பேர் சிகிச்சையில் உள்ளனர். * … Read more

தேர்வில் காப்பி அடித்ததாக ஆடையை கழற்றி சோதனையிட்ட ஆசிரியை – அவமானம் தாங்காமல் தீக்குளித்த மாணவி

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேற்று முன் தினம் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது, தேர்வு எழுந்த வந்த 9-ம் வகுப்பு மாணவி தேர்வில் காப்பி அடிக்க ‘பிட் பேப்பர்’ வைத்துள்ளதாக ஆசிரியை கருதியுள்ளார். இதனால், வகுப்பறைக்கு அருகே உள்ள அறைக்கு மாணவியை அழைத்து சென்ற அந்த ஆசிரியை மாணவியின் ஆடையை கழற்றி சோதனையிட்டுள்ளார். மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளார். இந்நிலையில், ஆசிரியை … Read more

உலகப் பசி குறியீட்டு மதிப்பீடு; 101-வது இடத்திலிருந்து 107-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா!

இந்தியா உலகப் பசி குறியீடு (Global Hunger Index) 2022-ல் உலகளவில் 121 நாடுகளில் 107-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 101-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 107-வது இடத்திற்குச் சரிந்து தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைவிடப் பின்தங்கியுள்ளது. சீனா, துருக்கி, குவைத் உட்பட 17 நாடுகள் ஐந்திற்கும் கீழான GHI மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்திருப்பதாகப் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகப் பசி குறியீட்டின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு

சென்னை: சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த  சதீஷை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார். சதீஷை ரயில்வே போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் உள்துறை மந்திரி அமித்ஷா..!

போபால், இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக இந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று தொடங்கி வைக்க உள்ளதாக மத்த்ய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்திருந்தார். அப்போது இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை அமித்ஷா வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு இந்தியில் கற்பிப்பது இதுவே … Read more

தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் எல்.இ.டி டிவி திருட்டு! – கொள்ளையர்களின் இலக்கு முக்கிய ஆவணங்களா?

​தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் ஓ‌.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு ​​உள்ளது.​ ​பெரியகுளம், தென்கரை அக்ரஹார தெருவில் இரண்டு வீடுகள், போடி​யி​ல் ​எம்.எல்.ஏ., ​அலுவலகம் உள்ள​து. இருப்பினும் ​கைலாசபட்டி பண்ணை வீட்​டில் ​தனது ஆதரவாளர்களை​ ​சந்திப்பதையே ஓ.பி.எஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் ​கைலாசநாதர் கோயில் மலைச் சாலை​யை ஒட்டி​​ ​வயல்வெளிகளுக்கு நடுவே​, தனது தென்னந்தோப்பிற்கு அரு​கே 4 ஏக்கர் நிலத்துக்குள் பண்ணை வீ​ட்டைக் கட்டியுள்ளார். நான்கு ஏக்கரை சுற்றியும் 10​ ​அடி உயர​ மதில் சுவர் கட்டி, ​உள்ளே ​பசு மாடுகள் வளர்ப்பு மற்றும் வேளாண் இடு பொருள்கள் … Read more

மேட்டூர் அணை நீர் திறப்பு வினாடிக்கு 2,00,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணை நீர் திறப்பு வினாடிக்கு 2,00,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர்

ஆர்ப்பாட்டம் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம், புதுவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவையில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண்.குமாரவேல், கலியபெருமாள், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், பு.சு.இளங்கோவன், ஜே.வி.எஸ்.சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் … Read more

ஃபிரிட்ஜில் ரத்தக்கறை, வீட்டு வளாகத்தில் எலும்புத் துண்டு-நரபலி கொடுத்த வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே நடுங்கச் செய்துள்ளது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகமது ஷாஃபி, பகவல் சிங், அவர் மனைவி லைலா ஆகியோரை போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே முகமது ஷாஃபி-யை அழைத்துச் சென்று கொச்சியில் உள்ள அவரது வீடு, ஹோட்டல் ஆகியவற்றில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கொலைசெய்யப்பட்ட பத்மா-வின் 39 கிராம் நகைகளை அடகு வைத்ததற்கான ரசீது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் … Read more