எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பி.எஸ் – சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்த எடப்பாடி & கோ!

சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓபிஎஸ்-க்கே தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வராமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கும், உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கும், கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் அதன் பிறகு … Read more

கனடாவில் அதிகாலை 2 மணிக்கு கொல்லப்பட்ட தமிழர்! கைதான கொலையாளியின் பெயர் வெளியானது

கனடாவில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர். சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது. கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. Durhamன் Ajaxல் உள்ள மது அருந்தகத்தின் வாசலில் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது வாகன நிறுத்துமிடத்தில் இருவர் சண்டையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: டெல்லி தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் உள்பட தலைவர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்பிக்கள் ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில்  தங்களது வாக்குகளை செலுத்தினார். ஏட்றகனவெ தேர்தல் பிரிவு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி  மூத்த தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வாக்களிக்க முடியாது என அறிவித்திருந்த நிலையில், அவர்கள்  டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர். 22ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு சர்ச்சைகளுக்கு … Read more

கொள்முதல் குறைந்ததால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு

மதுரை: கொள்முதல் குறைந்ததால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 40 ஆயிரம் லிட்டர் கொள்முதல் குறைவால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய பால் 3 மணி நேரம் தாமதமாக விநியோகம் செய்யப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பாலை விற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட வேண்டாம்- ராஜ் தாக்கரே கோரிக்கை

மும்பை, ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே … Read more

“இந்தி எதிர்ப்பு பெயரில், வராத ரயில் பாதையில் தலையை வைத்தவரின் வழித் தோன்றல்…" – அண்ணாமலை தாக்கு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு 100 சதவிகிதம் பயிற்று மொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அமித் ஷா மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின், “இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள்கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவருவதை எப்படியாவது … Read more

ஸ்டெம்பை தெறிக்கவிட்ட பந்து! கிளீன் போல்ட் ஆன தினேஷ் கார்த்திக் வீடியோ

கிரிக்கெட் பயிற்சியின் போது தினேஷ் கார்த்திக் க்ளீன் போல்ட் ஆகி அவுட்டான வீடியோ வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் அக்டோபர் 23ஆம் திகதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஜஸ்பரீத் பும்ரா காயம் காரணமாக விலகிவிட்டதால், மாற்றாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. … Read more

தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு கார்கள், பைக்குகளை போனஸாக வழங்கிய பிரபல தொழிலதிபர்…

சென்னை: சென்னை, மதுரையில் கிளைகளை கொண்டுள்ள பிரபல நகைக்கடை அதிபர், தீபாவளி போனஸாக தனது கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களை கவுரவிக்கும் வகையில், சிற்நத  ஊழியர்களுக்கு கார்கள், பைக்குகளை போனஸாக வழங்கி அசத்திஉள்ளார். தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கார் மற்றும் பைக்குகளை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது.  தீபாவளியையொட்டி, அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழக்குவது வாடிக்கை. குறைந்த பட்சம் ஒரு மாதம் … Read more

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடக்கம்

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 9,300 பேர் வாக்களிக்கும் தேர்தலில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிழைப்புக்காக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்…| Dinamalar

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மியான்மர் நாட்டில் சட்டவிரோத கும்பலிடமிருந்து நீண்ட போராட்டத்திற்கு பின் மீண்ட, தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவர்கள் குற்றவாளிகள் அல்ல. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஒன்பது பேரையும் உடனடியாக மீட்க வேண்டும். பிழைப்புக்காக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்… இவ்விஷயத்தில் அரசுகள் தீவிர … Read more