தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தது இலங்கை ராணுவம்

கொழும்பு: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1500 கிலோ மஞ்சள் மூட்டைகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்தது.  மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அட! டெல்லிக்கு உள்ளாடை வாங்க போனேன்…ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சகோதரரின் பதிலால் சர்ச்சை!

India oi-Mathivanan Maran ராஞ்சி: டெல்லி பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொறுப்பே இல்லாமல், முகம் சுழிக்கும் வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் பதிலளித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன. ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டு கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது முரண்பாடுகள் … Read more

தைவானை பயன்படுத்தி சீனாவை கட்டுப்படுத்த முடியாது.. மீண்டும் முட்டிக் கொள்ளும் சீனா – அமெரிக்கா

தைவான் விவகாரத்தில் மீண்டும் அமெரிக்கா சீனா இடையேயான மோதல் போக்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது தைவானுக்கு 8,000 கோடி ரூபாய்க்கு மேலான போர் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது சீனா அமெரிக்கா இடையே மேலும் பதற்றத்தினை அதிகரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையினாலேயே கடுப்பான சீனா, போர் ஒத்திகையினை பார்த்தது. எல்லை பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டது. ஆளில்லா விமானங்களை தைவான் எல்லையில் பறக்க விட்டது. இதுவே பெரும் பதற்றத்தினை அந்த சமயத்தில் … Read more

ஐரோப்பிய பெண்ணைக் கரம்பிடித்த மதுரை இளைஞர்; ராமநாதபுரம் கோயிலில் நடந்த திருமணம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் காசிநாதன்-சூரியகலா மகன் காளிதாஸ் (31), இவர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் தனது சொந்த ஊருக்கு வந்த அவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் செக் குடியரசில் தன்னுடன் பணியாற்றிய ஹானா பொம்க்லொவா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் வந்த காளிதாஸ் … Read more

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சென்னை: இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தேவை என முடிவு எடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் தலைமைக் கழகம் எங்களுக்கு தரப்பட்டது என எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு பிரவுன்! ராஜ்நாத் சிங்கிற்கு வெள்ளை! குதிரை பரிசளிக்கும் மங்கோலியாவின் பின்னணி காரணம்

International oi-Nantha Kumar R உலான்பட்டர்: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மங்கோலியா நாட்டு அதிபர் உக்னாகின் குருல்சுக் வெள்ளை நிறத்தில் குதிரை பரிசளித்துள்ளார். இதற்கு ராஜ்நாத் சிங் ‛தேஜஸ்’ என பெயரிட்டுள்ளார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான், மங்கோலியா நாடுகளுக்கு சென்றார். மத்திய பாதுகாப்பு துறை ஒரு அமைச்சர் மங்கோலியா செல்வது இதுதான் முதல் … Read more

அதிகப்படியான கடனில் சிக்கித் தவிக்கும் 10 நாடுகள்.. இந்தியா-வும் லிஸ்டில் இருக்கா?

ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம், உலக நாடுகளில் அதிக கடன் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் முன்னணி வளர்ச்சியில் உள்ள நாடுகள் கூட இடம்பெற்றுள்ளது தான் ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. ஐஎம்எஃப் அறிக்கையின் படி முதல் 10 அதிக கடனுள்ள நாடுகளை பார்ப்போம். இதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதா? எத்தனையாவது? எவ்வளவு கடன் வாருங்கள் பார்க்கலாம். இந்தியாவுக்கு பிரச்சனையாக மாறும் சர்வதேச மந்த நிலை.. எப்படி தெரியுமா? ஜப்பான் ஆசிய நாடான ஜப்பான் … Read more

செல்லமாக வளர்த்த நாயை தூக்கில் தொங்கவிட்டு, டெய்லர் தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது!

பெங்களூருவைச் சேர்ந்த டெய்லர் ரகு, வயது 47. இவர் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு குடிப்பெயர்ந்தனர். ஆரணி சின்னசாயக்காரத் தெருவில் வீடு, கடையை வாடகைக்கு எடுத்து தங்கினர். துணிகளை தைத்து கொடுப்பது, பட்டுப்புடவைகளை வாங்கி விற்பனைச் செய்வது என அவர்களின் வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஒருக்கட்டத்தில் கணவன்மீது கோபமடைந்த மஞ்சுளா சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து … Read more

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என்று கூறினார். எடப்பாடி கூட்டிய  அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு வந்த … Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.