தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் எல்.இ.டி டிவி திருட்டு! – கொள்ளையர்களின் இலக்கு முக்கிய ஆவணங்களா?
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. பெரியகுளம், தென்கரை அக்ரஹார தெருவில் இரண்டு வீடுகள், போடியில் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இருப்பினும் கைலாசபட்டி பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்திப்பதையே ஓ.பி.எஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் கைலாசநாதர் கோயில் மலைச் சாலையை ஒட்டி வயல்வெளிகளுக்கு நடுவே, தனது தென்னந்தோப்பிற்கு அருகே 4 ஏக்கர் நிலத்துக்குள் பண்ணை வீட்டைக் கட்டியுள்ளார். நான்கு ஏக்கரை சுற்றியும் 10 அடி உயர மதில் சுவர் கட்டி, உள்ளே பசு மாடுகள் வளர்ப்பு மற்றும் வேளாண் இடு பொருள்கள் … Read more