52 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி: குஜராத் தொழிலதிபர் சாதனை| Dinamalar
ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் போடக் தேவ் நகரில் வசிப்பவர் பிரதீப் குமார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வை எழுதியிருந்தார். கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு, பிரதீப்குமார் 607 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.அவர் கடந்த 1987 ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் அப்போது 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.பின்னர் டில்லி பல்கலையில், … Read more