சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரின் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22 -ம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம் சிங் யாதவ் அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து … Read more

உபியின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்…

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் உடல்நிலை கடந்த ஒரு வாரமாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மூத்த அரசியல்வாதியும்,  உ.பி. மாநில முதல்வருமான 82வயது முலாயம்சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு … Read more

முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராடியா மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தல்; சொந்த கட்சி தோல்வி அடைய பா.ஜ.க.வில் பல தலைவர்கள் விருப்பம்: கெஜ்ரிவால் பேச்சு

தரம்பூர், குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். … Read more

`சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்' – என்ன பிரச்னை?

பாரம்பர்ய சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவேண்டும் எனக்கோரி, கடந்த வெள்ளியன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, மீனவர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமாரி வரையிலான பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர். சென்னையில் மீனவர்கள் போராட்டம் சுருக்குமடி வலை என்றால் என்ன? செவிள் வலை, கரை வலை, தூண்டில் போல … Read more

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா! சட்ட விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததாக தகவல். சட்ட விதிகளை மீறினார்கள் என குற்றஞ்சாட்டும் ஒரு தரப்பு. விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பிய நிலையில் வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9ம் திகதி … Read more

சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை! தமிழகஅரசு

சென்னை: சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டுகள் (முகவர்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. jதமிழ்நாட்டில் வெளிநாட்டுவேலைகளுக்காக பல ஏஜெண்டுகளும், நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன. இந்த நிறுவனங்சகளில், முறையான விசா உள்பட அனுமதி இல்லாமல் பலரை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றன. இதனால், அங்கு செல்லும் தமிழக வாலிபர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாவதுடன், சிறை தண்டனையும் பெறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றன. இதுபோல சமீபத்தில், ஏஜெண்டுகளால் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு … Read more

தருமபுரியில் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

தருமபுரி: தருமபுரியில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் தருமபுரியை சேர்ந்த ராகுல், சந்தோஷ், ஜீவபாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருமலை வாடகை அறை ஒதுக்கீடு முறை; திருப்பதிக்கு மாற்றுகிறது தேவஸ்தானம்| Dinamalar

திருப்பதி : திருமலையில் செயல்பட்டு வந்த வாடகை அறை ஒதுக்கீடு முறை விரைவில் திருப்பதிக்கு மாற்றப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார். திருமலையில் நேற்று காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று, தங்கள் குறைகளை கூறிய பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி பதிலளித்தார். நிகழ்ச்சி நிறைவுக்கு பின் அவர் கூறியதாவது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ஸ்ரீவாரி சேவார்த்திகள் … Read more

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

புதுடெல்லி, டெல்லியில் பர்ஷ்கானா லஹோரி கேட் அருகில் உள்ள வால்மீகி மந்திர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது. முன்னதாக இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அது பாழடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 4 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரை மீட்பு … Read more