HDFC கடனுக்கான வட்டியை 0.25% உயர்த்தியது.. புதிய வட்டி விகிதம் என்ன தெரியுமா..?

ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, வீட்டுக் கடன்களுக்கான சில்லறை கடன் விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளது. இப்புதிய வட்டி விகிதங்கள் திருத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இந்த வட்டி விகித உயர்வால் புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ விகிதமும் உயர உள்ளது. இதனால் ஹெச்டிஎப்சி-யில் கடன் வாங்கியவர்கள் அனைவரும் கூடுதலாக ஈஎம்ஐ செலுத்தத் தயாராகுங்கள். ஐடி ஊழியர்கள் சோகம்.. 70% … Read more

How to: ஆண்ட்ராய்டு மொபைலில் IMEI எண்ணை கண்டறிவது எப்படி?|How to find IMEI number?

ஒரு மொபைல் எங்கு தயாரிக்கப்பட்டது, அந்த போனின் மாதிரி எண் என்ன என்பதை எல்லாம் கண்டுபிடிக்க உதவும் ஓர் எண் என்றால், அது அந்த மொபைலின் IMEI (International Mobile Equipment Identity) எனப்படும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்ணாகும். மொபைல் தொலைந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க உதவும் மிக முக்கிய எண் இந்த IMEI எண், நெட்வொர்க்கில் உள்ள மொபைல் சாதனத்தை தனித்துவமாக அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. போன்/மோடம் கொண்ட ஒவ்வொரு மொபைல்போன், ஜிஎஸ்எம் மோடம் … Read more

தொண்டையில் சிக்கியுள்ள சளியை எளிதில் வெளியேற்ற வேண்டுமா? சில எளிய வழிகள் இதோ

தொண்டைச்சளி என்பதை ஆங்கிலத்தில் pharyngitis என்பார்கள். பெரும்பாலானவர்க்கு வைரஸ் கிருமியினால்தான் இது வரும். வைரஸ் கிருமியினால் வரும் தொண்டை வலி,சளி மற்றும் கரகரப்பு சிலநாட்களில் தானாகச்சரியாகி விடும். இருந்தாலும் இது சிலருக்கு வலியை தருபவையாக மாறிவிடும். எனவே இவற்றை எளியமுறையில் நீக்குவது சிறந்தது.     சில மூலிகை பொருட்கள் தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள சளியை வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.   Photo – vinmec 250-300 மில்லி லிட்டர் … Read more

அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார்….

சென்னை: அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக விலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்தவர் மாயத்தேவர். அவர் இன்று  காலமானார். அவருக்கு … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை

சென்னை: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களாக வந்த நீங்கள், தமிழகத்தின் குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளீர்கள் என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!

தங்கத்தினை போதும் என்று கூறுபவர்கள் இந்தியாவில் இருப்பார்களா? அப்படி இருந்தால் அவர்கள் குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். எனினும் ஒரு தனி நபர் அதிகபட்சம் எவ்வளவு தங்கத்தினை வாங்கலாம் என்பது குறித்து யோசித்திருப்போமா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் பலரும் கூறுவார்கள்? எனினும் ஒரு போர்ட்போலியோவில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? இது குறித்து முதலீட்டு நிபுணர்கள் என்ன கூறுகின்றனர், வாருங்கள் பார்க்கலாம். 12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் … Read more

“அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ்; அவரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை!" – கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார். பின்னர் இல்லை என்றார். முந்தைய தேர்தலில்கூட அ.தி.மு.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பின்னர் அரசியல் வேண்டாம் எனச் சொல்லி ரசிகர் மன்றத்தை சந்தித்தார்…. … Read more

துயரமான சம்பவம், அருமையான நண்பரை இழந்துவிட்டேன்! குமார் சங்ககரா

* ருடி கோர்ட்ஸர் 209 ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்து சாதனை படைத்தவர் * உண்மையில் ருடி கோர்ட்ஸர் விளையாட்டை நேர்மையாக விரும்பினார் என குமார் சங்ககரா குறிப்பிட்டார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நடுவர் ருடி கோர்ட்ஸர் கார் விபத்தில் பலியானது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககரா வருத்தம் தெரிவித்துள்ளார். Twitter தென் ஆப்பிரிக்க நடுவர் ருடி கோர்ட்ஸர்(73) கோல்ப் விளையாட தனது இரு நண்பர்களுடன் சென்றுள்ளார். அதன் பின்னர் தலைநகர் … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழகஅரசு ஏழை மாணவிகள் உயர்கல்வி படிக்க மாதம் தோறும் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது.  தேர்வு செய்யப்படும் மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து,  அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பிப்ரவரி மாத  மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது,   மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை வாசித்தார் போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார். அனைத்து வீரர்களும் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் என போட்டி இயக்குனர் பரத் சிங் கோரிக்கை விடுத்தார்.