முகம் சுழிக்கும் வகையில் இளவரசர் ஹரி – மேகன் முன்னிலையில் பேசிய வில்லியம்! வெளியான புதிய தகவல்கள்

இளவரசர் ஹரி – மேகன் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்த வில்லியம். அப்போது அவர் பேசியது தொடர்பாக வெளியான தகவல்கள். இளவரசர் ஹரி – மேகன் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்த வில்லியம் அப்போது பேசியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அரச குடும்ப எழுத்தாளர் கேட்டி நிக்கோல் தனது Harry: Life, Loss, and Love என்ற ஹரியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 2011ல் இளவரசர் வில்லியம் – கேட் திருமணம் நடைபெற்றது. … Read more

சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை – ராகுல் காந்தி

தும்கூர்: சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எனக்குத் தெரிந்த வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு உதவியே வந்தது. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித்தொகை பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் பாஜக என்ற கட்சியே கிடையாது. இதுபோன்ற உண்மைகளை பாஜகவால் ஒருபோதும் மறைக்க … Read more

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பொதுக்குழு கோட்டம் நடைபெறும் அமைந்தகரைக்கு முதல்வர் புறப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக 2-வது முறையாக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுகிறார்.

கர்நாடகாவில் 32-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி…!

கர்நாடகா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையே, ஒரு … Read more

வெளிநாட்டு `போலி' வே(வ)லைகளில் சிக்காமல் இருப்பது எப்படி? – மியான்மர் சம்பவம் தந்த அனுபவப் பாடங்கள்!

`துபாயில் ஐ.டி. வேலை என்றுகூறி போலி ஏஜென்டுகளால் துபாய் அழைத்துச்செல்லப்பட்டு, பிறகு அங்கிருந்து தாய்லாந்து நாட்டுக்கு கொண்டுசென்று, அதன்பிறகு சட்டவிரோதமாக எல்லைக்கடந்து மியான்மர் நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் கிரிப்டோகரன்சி, ஆன்லைன் மோசடி வேலைகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்களை, இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்டது தமிழ்நாடு அரசு.’ மியான்மரில் மீட்கப்பட்ட தமிழர்கள் இதேபோல, `வெளிநாட்டு வேலை, லட்சக்கணக்கில் சம்பளம்’ என ஆசை விளம்பரங்களைக் காட்டி, ஏழைமக்களிடம் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, மொழிபுரியாத நாடுகளில் இறக்கிவிட்டு, இறுதியில் … Read more

வீட்டிற்குள் நுழைய கேட்டின் முன் நின்ற ஒற்றை யானை

கோவை: கோவை மாவட்டம் சின்னத் தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது. https://patrikai.com/wp-content/uploads/2022/10/irUNzq44v5tIIVRX.mp4 இந்நிலையில் நேற்று பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ஒற்றை யானை ஒன்று கதிர்நாயக்கன்பாளையம் செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாயி ஒருவரின் வீட்டுக்குள்ளே நுழைய கேட்டின் முன்பு நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வீட்டில் இருந்தார்கள் யானை வீட்டுக்கு வெளியே நிற்கும் காட்சியை வீடியோவாக பதிவு … Read more

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே சரளப்பட்டியில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் தமிழரசனை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஆர்வம்; அமைச்சர் முருகேஷ் நிரானி அழைப்பு| Dinamalar

பெங்களூரு, : ”பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரின் ஆலோசனை பெற்று, தொழிற்துறையில் மேம்பாடு கொண்டு வருவோம்,” என பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது: கர்நாடகா, இப்போதும் தொழில் மண்டலத்தில், நாட்டிலேயே முன்னணியில் உள்ள மாநிலமாக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் வருகிறது. முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்கு, நாம் அளிக்கும் சலுகைகள் போன்று, நாட்டின் வேறு எந்த மாநிலங்களும் அளிப்பதில்லை. ஜெகதீஷ் ஷெட்டர் எங்கள் கட்சியின் மூத்த … Read more

சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி

மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவி போட்டி காரணமாக தேர்தலுக்கு பிறகு கூட்டணி முறிந்தது. மேலும் கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி … Read more

ராமநாதபுரம் நீதிமன்ற வைப்பறையில் இருந்த மது பாட்டில்கள் மாயம் – ஊழியர்களே திருடினார்களா?!

ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ளது. இதில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் முதன்மை நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் எண்‌ 1 மற்றும் 2, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள், புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் அந்தந்த நீதிமன்றங்களின் வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வழக்கு விசாரணை முடிந்து … Read more