இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிரித்தானிய இளம்பெண்… குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் இருந்ததால் அதிர்ச்சி

பிரித்தானிய இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவற்றில் ஒன்று வெள்ளையினக் குழந்தையாகவும் மற்றொன்று கருப்பினக் குழந்தையாகவும் உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.   பிரித்தானிய இளம்பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவை வெவ்வேறு நிறத்தில் இருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள Nottinghamஐச் சேர்ந்த Chantelle Broughton(29), பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவரிடம் குழந்தைகளை செவிலியர்கள் கொடுத்தபோது தன் குழந்தைகளைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் … Read more

பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம்! அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்க அறிக்கை…

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்கம் அளித்து உள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம்  பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நிலங்கள் கையக்கப்படுத்த உள்ள நிலையில், சிலர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதன் மூலம் … Read more

பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னை தின நிகழ்ச்சி தொடங்கியது

சென்னை: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் சென்னை தின நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மனை வரை பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செல்பி பூத்கள், உணவு விற்பனை கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றனர். 

பலாத்கார குற்றவாளிகள் விடுதலை பின்னணியில் குஜராத் தேர்தல்.. உருது ஊடகங்கள் சந்தேகம்

India oi-Halley Karthik காந்திநகர்: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத்தின் உருது பத்திரிகைகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. Recommended Video அம்மாநில செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் இந்த விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில், உருது செய்தி ஊடகங்கள் தங்களது மாற்றுக் கருத்தை தைரியமாக பதிவு செய்துள்ளன. ‘இன்குலாப்’ உள்ளிட்ட உருது செய்தி பத்திரிகைகள் குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து முதல் பக்கத்திலேயே காட்டமாக எழுதியிருந்தன. யார் … Read more

பாக்.,கில் இருந்து வந்த மிரட்டலால் போலீஸ் உஷார்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தானில் செயல்படும் தொலைபேசி எண்ணில் இருந்து வந்த மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி கடல் வழியாக வந்து மும்பைக்குள் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 18 பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட … Read more

பயோகேஸ் மூலம் `பலே' நன்மைகள்!

இயற்கை விவசாயத்தின் ஒரு அம்சம் தான் பயோகேஸ் எனும் சாண எரிவாயு.. இயற்கை விவசாயத்தில் ஆர்வத்துடன் பலரும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு பல விதத்தில் நல்ல லாபத்தை தருவது பயோகேஸ் எனும் சாண எரிவாயு ஆகும். பயோஎனர்ஜி எனும் உயிர் சக்தி பயன்பாட்டில் கால் நடைகள் கழிவு மிக அதிகமாக சக்தி செறிவு கொண்டுள்ளது, இதற்கு கலன் அமைத்தல் முறையை பார்ப்போம். சாணம் சேமிக்கும் முறை “பத்மஸ்ரீ விருதைவிட உயர்ந்ததாக நினைக்கிறேன்” சிறந்த விவசாயி விருது … Read more

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்! இலங்கை அணி அறிவிப்பு… கேப்டன் இவர் தான்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ல் தொடக்கம் இத்தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தஷுன் ஷனகா நியமனம் ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரானது வரும் 27ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்கான இலங்கை அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி விபரம்: தஷுன் ஷனகா (கேப்டன்), தனுஷகா குணதிலக, பதும் நிஸ்சங்கா, குசல் மெண்டீஸ், சரித் அசலங்கா, … Read more

கர்நாடக முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்! 16 பேர் கைது

பெங்களூரு:  கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் 75 சுதந்திரத்தன்று, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் படங்கள் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் வைக்கப்பட்ட விவகாரத்தால்  அங்கு இரு மதத்தவர்களிடையே பிரச்னை ஏற்பட்டது. சிவமோகா மாவட்டம்  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், அங்கு  ஆர்எஸ்எஸ் தலைவர் வீர சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு க கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமைய்யா கடும் எதிர்ப்பு … Read more

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது

சென்னை: மதுபோதையில் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி மகாலிங்கம்(57) மேச்சேரியில் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மேட்டூர் அணையில் குண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளார். மிரட்டல் விடுத்த நபர் பேசிய செல் எண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது.