மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!

புதுடெல்லி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட மாநிலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் மம்தா பானர்ஜி விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க உள்ளார். மேலும் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழு … Read more

இதையும் விட்டுவைக்காத கௌதம் அதானி.. ஏர் ஒர்க்ஸ்-ஐ வாங்கும் திட்டம்..!

அதானி குழுமம், இந்தியாவின் பழமையான விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த 462 கோடி ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த ஆஃபர் ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்திற்குத் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் கைப்பற்றும் உறுதியாகும். மேலும் இந்த விலை குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி இத்தொகையை உயர்த்தும், குறைக்கவும் முடியும். அதானி குழுமத்தின் அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு குழு ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தைக் … Read more

பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு… தஞ்சை பூண்டி கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை!

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் புஷ்பம் கலைக் கல்லூரி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, மறைந்த துளசி அய்யா வாண்டையார் இந்தக் கல்லூரியினை நிர்வகித்து வந்தார். ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் கல்லூரியைச் செயல்படுத்தினார். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர். கிருஷ்ணசாமி வாண்டையார் அரசு அறிவித்த கட்டணத்தைத் தாண்டி ஒரு பைசாகூட கூடுதலாக வசூலிக்காத கல்லூரி … Read more

தமிழகத்தில் இன்று 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  05/08/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,50,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 29,496 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,82,92,807 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் இருவர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். இதுவரை 35,50,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,033 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,530 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: நீதிபதி ஜி.ஜெயராமன் விசாரிப்பார் என அறிவிப்பு!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயராமன் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதால் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி புதிய நீதிபதியயை அறிவித்துள்ளார்.

பைக் சாவிக்காக நடந்த சண்டையில் மகனின் கையை துண்டித்த தந்தை – மகன் உயிரிழப்பு

தாமோ, மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோவில் மோட்டார் சைக்கிள் சாவிக்காக நடந்த சண்டையில் தந்தை கோடரியால் கையை துண்டித்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி 21 வயது மகன் உயிரிழந்தார். மோதி படேல் (வயது 51) அவரது மூத்த மகன் ராம் கிசான் (வயது 24) இருவரும் வெளியில் செல்வதற்காக அவரது இளைய மகன் சந்தோஷ் படேலிடம் மோட்டார் சைக்கிள் சாவியைக் கேட்டுள்ளனர். சந்தோஷ் சாவியை கொடுக்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மோதி, … Read more

ரத்தன் டாடாவின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

உங்கள் மீது யாரேனும் ஒரு கல்லை வீசினால் அதனை நீங்கள் என்ன செய்வீர்கள். திரும்ப எடுத்து தாக்கத் தான் பலரும் நினைப்போம். ஆனால் அப்படி வீசப்பட்ட கல்லை வைத்து கட்டிடம் எழுப்புங்கள் என்று கூறுபவர் ரத்தன் நாவல் டாடா. இந்தியாவில் தொடங்கிய தனது வணிகத்தினை, இன்று உலகம் முழுக்க எடுத்து சென்றுள்ள ரத்தன் டாடா, உப்பு முதல் விலை மதிப்பு மிக்க தங்கம், கார் என பலவற்றிலும் வெற்றிகரமாக கோலேச்சி வருகின்றார். டாடா குழும நிறுவனம் எடுத்த … Read more

எல்லைக் கோட்டை கடந்த 68 சீனப் போர் விமானங்கள்; தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம்!

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியான நாள் முதலே அமெரிக்காவை, சீனா எச்சரித்து வந்தது. இருப்பினும், சீனாவின் எச்சரிக்கைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல், நான்சி பெலோசி தைவானுக்கு வந்திறங்கினார். தைவான் ஒரு சுதந்திர நாடாக இருப்பினும், சீனா இன்னும்கூட அதைச் சொந்தம் கொண்டாடி வருகிறது. நான்சி பெலோசி நான்சி பெலோசி தைவானிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்ட போதிலும், தைவானைச் சுற்றி முக்கியப்பகுதிகளில், சீன ராணுவம் பயிற்சி மேற்கொண்டுவருவதாகச் செய்திகள் வெளியாகின. அதையடுத்து, ரஷ்யா-உக்ரைன் போல் சீனா-தைவான் … Read more

மோடி ஆதரவாளர் பால் தாக்கரேவின் கட்சியை அழிக்கும் பாஜக : சிவசேனா கண்டனம்

மும்பை பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்த பால் தாக்கரேவின் கட்சியை பாஜக அழிப்பதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா 2 ஆக உடைந்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது. பாஜகதான் கட்சி உடைந்ததற்கு பா.ஜனதா தான் முக்கிய காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது.  பஜக தலைவர் ஜே பி நட்டா கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் அழிந்துவிடும் என பேசியிருந்தார். சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ … Read more

பர்கூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ் என்பவர் பலியாகினார். மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ் மற்றும் கார் ஓட்டுநர் தணிகைமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.