உக்ரேனிய அகதிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானிய மில்லியனர்

ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்தே உக்ரேனிய அகதிகளை இங்கிலாந்துக்கு அழைத்து வர ஆதரவு உக்ரேனிய பெண்மணியை மீட்டுவர, பிரதமர் போரிஸ் ஜோன்சனை தொடர்பு கொண்டு கடும் அழுத்தம் பிரித்தானியாவில் உக்ரேனிய அகதி ஒருவருக்கு தங்கள் குடியிருப்பில் அடைக்கலம் அளித்த மில்லியனர் ஒருவர் தற்போது மனைவியை கைவிட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் Wonga என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவரான 52 வயது Haakon Overli என்பவரே உக்ரைன் அகதியுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக மனைவியை கைவிட்டவர். சில வாரங்கள் … Read more

ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

சென்னை: கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்க உள்ள ராகுல்காந்தி, அதற்காக இன்று மாலை சென்னை வருகிறார். மக்களிடையே  ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நாட்டு மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு புத்துணவை ஊட்டவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 150 நாட்கள் குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவரது பாத யாத்திரை, வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது. ராகல் நடை பயணத்தை … Read more

தமிழக அரசு சார்பில் லண்டனில் கட்டப்பட்டு உள்ள பென்னி குயிக் சிலை வரும் 10ம் தேதி திறப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் லண்டனில் கட்டப்பட்டு உள்ள பென்னி குயிக் சிலை வரும் 10ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த விழாவில் விழாவில் பங்கேற்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் புறப்பட்டார்.

ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு| Dinamalar

புதுச்சேரி : ‘ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என முதல்வர் ரங்க சாமி தெரிவித்தார்.ஆசிரியர் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:எழுத்தறிவித்தவன் இறைவன் என கூறுவார்கள். அதனால் தான் ஆசிரியர்களை இறைவனோடு ஒப்பிடுகின்றனர். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். 5ல் அறிவுறுத்தினால்தான் பசுமரத்தாணிபோல மாணவர்களிடம் சென்று சேரும்.நான் விழாக்களில் பேசும் போது, ‘எப்படி பேசுகிறீர்கள்? புத்தகம் படிப்பீர்களா’ என கேட்பார்கள்.நான் புத்தகம் படிப்பதில்லை, நாளிதழ்கள்தான் பார்க்கிறேன்.இருப்பினும் பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை நினைவில் வைத்து பேசுகிறேன். மாணவர்களை … Read more

இன்று சந்தையின் போக்கு எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!

இந்திய சந்தைகள் கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து இன்று எப்படியிருக்குமோ என்ற பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 440 புள்ளிகள் அதிகரித்து, 59,246 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 126 புள்ளிகள் அதிகரித்து, 17,666 புள்ளிகளாகவும் இருந்தது. தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாக சற்று மேலாக காணப்படும் நிலையில், நிஃப்டி தற்போது வரையில் 17,300 – 17800 என்ற லெவல்களுக்குள்ளே காணப்படுகின்றது. ஆக இந்த முக்கிய லெவலை உடைக்கும்பட்சத்தில் சந்தையில் … Read more

5,000 கார்களை திருடிய ஆட்டோ ஓட்டுநர்; 3 மனைவிகளுடன் ஆடம்பர வாழ்க்கை – `பலே’ கார் திருடன் கைது

டெல்லி போலீஸார் இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனான அனில் சௌகான்(52) என்பவரைக் கைது செய்துள்ளனர். இவர் டெல்லி, மும்பை என வடகிழக்கு பகுதிகளில் சொத்துக்கள் சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். டெல்லி சிறப்புக் காவல்துறையினர் இவரை தேஷ் பண்டு குப்தா சாலையில் வைத்து கைது செய்துள்ளனர். இவர் கடந்த 27 ஆண்டுகளில் 5,000 கார்களைத் திருடிய மிகப்பெரிய திருடன் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸ் தரப்பில் இதுகுறித்து கூறுகையில், “அனில் 1995 காலக்கட்டத்தில் டெல்லியின் … Read more

செப்டம்பர் 6: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 108-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 108-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வருவாயை அதிகரிக்க வேண்டும்; ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை: வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று வருவாயை அதிகரிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை: ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு ஒன்பது மணிக்கு சார்த்தப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெறும். திருவோண சிறப்பு பூஜைகளை தரிசனம் செய்ய ஆன்லைன்’ வாயிலான முன்பதிவு நடைபெறுகிறது. நிலக்கல்லில், ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.

செப் – 06 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.