ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்காலம் என்ன..? முகேஷ் அம்பானி எடுக்கப்போகும் முடிவு..!

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் வைத்து அதிகப்படியான முதலீடுகள் திரட்டிய நாளில் இருந்து எப்போது ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்து ஐபிஐ வெளியிடப்போகிறது என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது. இதேவேளையில் முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகளுக்கு யாருக்கு எந்தத் துறை, எந்த வர்த்தகம் எனக் கடந்த வருடாந்திர கூட்டத்தில் கிளியர் ஆக அறிவித்த நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பான … Read more

“ஒன்றரை ஆண்டில் ஸ்டாலின் குடும்பம் ரூ.5,000 கோடி சம்பாதித்திருக்கிறது!" – வேலுமணி குற்றச்சாட்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் 3-வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது. ரெய்டுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை பொய் வழக்குப் போட்டிருக்கிறது. ஸ்டாலின் தொடர்ந்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். வேலுமணி ரெய்டு எஸ்.பி. வேலுமணி ரெய்டும்… செவ்வாய்க்கிழமை சென்டிமென்ட்டும்..! எத்தனையோ தலைவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இவரைப் போல எந்தத் தலைவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டதில்லை. இவர்கள் ஒன்றும் கடவுள் … Read more

ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும் உயிரினங்களின் பாலினம் குறித்த விவரங்கள் கணக்கிடப்பட வேண்டும்

அறிவியல் ஆய்வுக்கு மானியம் வழங்கும் அமைப்புகள் மற்றும் ஆய்வு பத்திரிகைகள் ஆண், பெண் என இருபாலினத்திலும் உயிரின ஆய்வு மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இரண்டு முக்கிய காரணங்களுக்காக இரு பாலினங்களை சேர்க்குமாறு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (NIH) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நிதிஉதவி செய்பவர்கள் மற்றும் ஆய்வு வெளியீட்டாளர்கள் ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஒன்று, பாலின அடிப்படையிலான வேறுபாடுகள், பெரும்பாலும் ஹார்மோன் சுயவிவரங்கள் அல்லது பாலின குரோமோசோம்களில் உள்ள மரபணுக்களுடன் … Read more

கோவை SDPI கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை சோதனை: கட்சி தொண்டர்கள் கண்டனம்

கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். SDPI கட்சி அலுவலகத்திற்கு இரவு 8.30 மணிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்துறை திடீரென நடத்திய சோதனை யால் அப்பகுதியில் உள்ள SDPI கட்சி தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குவிந்து அமலாத்துறையை  கண்டித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஆரணி அருகே சைவ ஹோட்டலில் பீட்ரூட் பொரியலில் எலி தலை.. உணவக உரிமம் ரத்து

Tamilnadu oi-Vishnupriya R ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததை அடுத்து அந்த கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையின் உணவக உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர முரளி. இவர் கம்பி கட்டும் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று பிற்பகலில் தன்னுடைய உறவினரின் காரியத்திற்காக ஆரணியில் உயர்தர … Read more

NPS திட்டத்தில் புதிய மாற்றம்.. IRDAI அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

காப்பீட்டு துறையின் கட்டுப்பாட்டு ஆணையமான IRDAI அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இன்று முதல் தேசிய பென்ஷன் திட்ட வாடிக்கையாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையிலும் பணத்தை எளிதாக வித்டிரா செய்யவும் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீண்ட கால அடிப்படையில் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யும் ஒரு திட்டம். இதில் முதலீடு செய்யவும் முடியும் அதேபோல் பென்ஷன்-ம் பெற முடியும் என்பதால் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று … Read more

`ஆம்புலன்ஸ் வரவில்லை' – புல்டோசரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்! – இது ம.பி அவலம்

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் மகேஷ் பர்மன் என்பவர் காயமடைந்தார். பர்மனுக்கு ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் காலிலிருந்து அதிக அளவு ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அரை மணி நேரத்துக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. साइकिल, ठेले, कंधे के बाद अब मरीज सीधे जेसीबी में! कटनी का मामला है लोगों … Read more

கங்காரு-வை செல்லப்பிராணி வளர்த்த அவுஸ்திரேலியர்: இறுதியில் அவருக்கு நேர்ந்த பரிதாபம்!

கங்காரு-வை செல்லப்பிராணியாக வளர்த்த 77 வயதுடைய நபர் உயிரிழப்பு. கங்காரு-வால் தாக்கப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் நம்பிக்கை. அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காருவின் தாக்குதலுக்கு ஆளான  77 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திங்களன்று அவுஸ்திரேலியாவில் பெர்த்தில் இருந்து தெற்கே 400 கிமீ (250 மைல்) தொலைவில் உள்ள ரெட்மண்டில் உள்ள வீட்டில் 77 வயது மதிக்கதக்க நபர் கங்காரு தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். Photo: 123RF இதனைத் தொடர்ந்து அந்த … Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பங்கள்! மருத்துவ கல்வி இயக்குநரகம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என  மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகின. 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், இதையடுத்து, மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பம், கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என மாணாக்கர்களிடையே எதிர்பார்ப்பு … Read more

விழுப்புரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: 3 பேர் காயம்; 2 பேர் பலி

விழுப்புரம்: மரக்காணம் அருகே கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.