'பஞ்சாபில் ஆபரேஷன் லோட்டஸ்’.. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ25 கோடி பேரம்.. ஆம் ஆத்மி கிளப்பிய பகீர்

India oi-Mani Singh S அமிர்தசரஸ்: பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பாஜனதா தற்போது பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், இதற்காக 7 முதல் 8 எம்.எல்.ஏக்களிடம் ரூ 25 கோடி பேரம் பேசியுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை … Read more

பத்ம விருதுக்கான பரிந்துரை தேதியை நீட்டிக்க கோரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பத்ம விருதுகளுக்கு பெயர்களை பரிந்துரைக்கும் அரசு இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுவது வழக்கம். … Read more

48 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமான நிலையில் பிரிட்டன்..! என்ன காரணம்?

பிரிட்டனின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தற்போது பணவீக்கம் என்பது 10% மேலாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 13% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் பிரிட்டனின் வேலையின்மை விகிதம் 1974 முதல் பார்க்கும்போது, ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது அதிக மக்கள் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7% … Read more

ராணி எலிசபெத்துக்காக மெக்கா புனித யாத்திரை மேற்கொண்ட நபர்; கைதுசெய்த சவுதி போலீஸ் – என்ன காரணம்?

பிரிட்டன் வரலாற்றில் நெடுங்காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்டரா மேரி கடந்த வாரம் காலமானார் என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், ராணி எலிசபெத்துக்காக உலக நாடுகள் பலவும் துக்கம் அனுசரித்தன. இந்த நிலையில், ராணி எலிசபெத்துக்காக மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட நபரை, சவுதி அரேபியா அரசு கைதுசெய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. ராணி எலிசபெத் ஏமன் நாட்டைச் சேர்ந்தவராக அறியப்படும் அந்த நபர், புனித யாத்திரையின்போது மெக்காவில் ராணி எலிசபெத்துக்காகப் பதாகை ஏந்தியதாகக் கூறப்படுகிறது. … Read more

 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 2 நாள் பயணமாக உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தான் செல்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் சீனா அதிபரும் கலந்துகொள்ளும் நிலையில், அவருடன் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைப்பின் 22 ஆவது உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15,16 தேதிகளில் நடைபெறுகிறது.  இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15-16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தானுக்குச் செல்கிறார். … Read more

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சின்னங்களை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்கள் இருப்பதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

239 பேருடன் மாயமாக மறைந்த.. எம்எச் 370 விமானம்.. 3,105 நாட்களாக விலகாத \"மர்மம்\".. நடந்தது என்ன?

International oi-Shyamsundar I கோலாலம்பூர்: ஒரு காலத்தில் உலகத்தையே உலுக்கிய சம்பவம்தான் எம்எச் 370 விமானம் காணாமல் போன நிகழ்வு. எங்கே போனது.. எப்படி மாயமானது.. விமானத்தில் சென்ற 239 உயிர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகள் உலகத்தையே ஆட்டிப்படைத்தன. பல நாடுகள் சேர்ந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த காணாமல் போன விமானத்தை தேடுவதற்கான தேடுதல் வேட்டையை நடத்தின. அதன்பின் தனியார் நிறுவனம் ஒன்று 1 வருடம் இந்த விமானத்தை தேடுவதற்காக தேடுதல் வேட்டையை நடத்தியது. … Read more

WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்..!

மழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட பெங்களூர் ஒரு வாரத்திற்கு இந்தியாவின் முக்கியமான விவாத பொருளாக மாறியது மட்டும் அல்லாமல் கர்நாடக அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. கொரோனா தொற்று முடிந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்து வர போராடி வரும் நிறுவனங்களின் முயற்சிக்காக முட்டுக்கட்டையாக கடந்த ஒருவாரம் பெங்களூரில் மழை காரணமாக இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் Work From Home கொடுத்தது. இந்த நிலையில் தற்போது பெங்களூர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் … Read more

“என் உடலைத் தொடாதே, நீ ஒரு பெண்..!" – போலீஸிடம் வாக்குவாதம் செய்த சுவேந்து அதிகாரி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில், ஊழல் செய்ததாக ஆளுங்கட்சிக்கு எதிராக, மாநில தலைமைச் செயலகம் நோக்கி எதிர்க்கட்சியான பா.ஜ.க இன்று போராட்டத்தில் இறங்கியது. இந்தப் போராட்டத்தை, முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும், தற்போது பா.ஜ.க-விலிருந்துகொண்டு மாநில எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகிப்பவருமான சுவேந்து அதிகாரி முன்னிருந்து நடத்தினார். பாஜக போராட்டம் அதைத் தொடர்ந்து, போராட்டம் எந்த வகையிலும் கலவரமாக மாறக்கூடாது என்பதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆங்காங்கே போலீஸார் கைதுசெய்துவந்தனர். அந்த வகையில், … Read more