காஷ்மீரில் பயங்கரம்.. நூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 11 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

India oi-Jackson Singh பூஞ்ச்: காஷ்மீரில் நூறு அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள … Read more

டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு சிவப்பு கொடி.. விப்ரோவுக்கு பச்சை கொடி.. கோல்ட் மேன் அதிரடி!

சமீப காலமாகவே சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி துறையானது பலத்த சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் மதிப்பினை ” Sell ” என டவுன் கிரேட் செய்துள்ளது. நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி நிறுவனங்களின் வருவாய் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய … Read more

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என தகவல்…

டெல்லி: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில், இந்தியா சார்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என அறிவிக்கப் பட்டு உள்ளது. கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால்மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அவரது உடல் நேற்று இரவு பங்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  நாளை முதல் 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. மறைந்த ராணிக்கு பொதுமக்கள் … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

\"ஸ்னேக் மேன்\".. பலநூறு பாம்புகளை அசால்ட்டாக பிடித்த பாம்பு மனிதன்! இறுதியில் நேர்ந்த துயரம் -பின்னணி

India oi-Halley Karthik ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட நபர், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் பிடிக்கும் பாம்புகளை பத்திரமாக காட்டுக்குள் சென்று விட்டுவிடுவார். பாம்பு கடித்த பின்னரும் அது குறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளாததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். விஷ பாம்புகள் இந்தியாவில் மட்டும் சுமார் 230 பாம்பு … Read more

பிரதமர் மோடியுடன் பூடான் அரசர் சந்திப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி வந்துள்ள பூடான் அரசர் ஜிக்மி கேசர் நாம்ஜியேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் அதனை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, பூடான் அரசர், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் மோகனை சந்தித்து பேசினார். புதுடில்லி: டில்லி வந்துள்ள பூடான் அரசர் ஜிக்மி கேசர் நாம்ஜியேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர … Read more

ஓரே நாளில் ரூ.740000 கோடி இழப்பு.. அமெரிக்க பணக்காரர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது..?

வல்லரசு நாடான அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் கணிக்கப்பட்டதைத் தாண்டி 8.3 சதவீதமாகப் பதிவான நிலையில் பெடரல் வங்கி மீண்டும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது. வட்டி விகிதம் உயர்த்துவதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மந்த நிலை உருவாகும், நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு அதிக வட்டியை செலுத்த வேண்டும், இதனால் லாபம் குறையும் இப்படிப் பல விஷயங்கள் இருக்கும் காரணத்தால் பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் … Read more

கோவிட்: “ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களுக்கு இழப்பீடு'' – நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!

கோவிட் பெருந்தொற்றின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் நிகழ்ந்தன. ஆனால் அந்தக் காரணத்தால் இறப்புகள் ஏதும் நிகழவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்தது. இதனிடையே, கோவிட் இரண்டாவது அலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்புகளைத் தணிக்கை செய்யும்படி, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது. Covid 19 Outbreak சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு திங்களன்று, ராஜ்யசபாவில், 137வது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் “கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, சுகாதார உள்கட்டமைப்பில் … Read more

பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாக ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அமோக வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் இருந்து வருகிறார். இந்த ஆட்சியை கவிழ்க்கும் வகையில், பாஜக, ஆம்ஆத்மி  எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க  திட்டமிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.  ஆம் … Read more