அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, ஈ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், … Read more

ஆம்பூரில் உள்ள ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை: ஆம்பூரில் உள்ள ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்!

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் ரிஸ்க் நிறைந்ததா? என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?

பொதுவாக நாம் முதலீடு செய்யும் அனைத்துமே ரிஸ்க் நிறைந்தது தான் என்பதும், ரிஸ்க் இல்லாத முதலீடு எதுவுமே இல்லை என்பதும் இயல்பான ஒன்று. ஆனால் ரிஸ்க் அளவு எவ்வளவு என்பதை மட்டுமே ஒவ்வொரு முதலீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எந்த அளவுக்கு ரிஸ்க் உள்ளது என்பதை தற்போது பார்ப்போம். IKEA நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்… வாடிக்கையாளர்களுக்கு இனி கொண்டாட்டம்! மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் … Read more

குறிவைக்கப்படும் ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா… அரசியல் பின்னணி என்ன?!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, துணை முதல்வராக இருந்துவரும் மணீஷ் சிசோடியா, கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளைக் கவனித்துவருகிறார். அவரின் வீட்டில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ மேற்கொண்ட அதிரடி சோதனை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு நவம்பரில் மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுக்கப்பட்டதிலும், அதை அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், டெல்லி … Read more

கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13-ம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியின் முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய ஜெயவேல் என்ற … Read more

நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு

சிதம்பரம், நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோவில் ஆவணங்கள், தங்க நகைகள் தொடர்பான ஆய்வு இன்றும் நடைபெற உள்ளது.

IKEA நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்… வாடிக்கையாளர்களுக்கு இனி கொண்டாட்டம்!

ஸ்வீடன் நாட்டின் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமான IKEA ஏற்கனவே இந்தியாவில் ஐந்து இடங்களில் கடைகளை திறந்து உள்ள நிலையில் தற்போது சிறிய நகரங்களிலும் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தனது சில்லறை விற்பனைக் கடையை திறந்து மக்களின் பேராதரவை IKEA பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது மற்றும் சிறிய நகரங்களிலும் கடையை திறப்பது போன்ற திட்டத்தை … Read more

`அதிவேக பயணம்… ஃபைன் கட்டுங்க’ ; பார்க்கிங்கில் நின்ற காருக்கு வந்த நோட்டீஸ் – திகைத்த உரிமையாளர்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துதல் போன்ற காரணங்களுக்காக பலரும் போலீஸில் சிக்கி அபராதம் செலுத்தியிருப்பர். ஆனால் இதுவே நீங்கள், உங்கள் காரை முறையாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டு திரும்பவந்து பார்க்கும்போது, `48 கி.மீ வேகத்துல செல்லக்கூடிய சாலையில், உங்க கார் 88 கி.மீ வேகத்துல போயிருக்கு, அபராதம் காட்டுங்க-னு’ உங்களுக்கு கடிதம் வந்தா எப்படியிருக்கும். அப்படி ஒரு … Read more

போக்குவரத்து பாலத்தை தகர்த்த உக்ரைன்…உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட அத்துமீறல் என ரஷ்யா குற்றச்சாட்டு

ஸ்லாவியன்ஸ்கில் உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு. பொதுமக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஷெல் செய்வதில் ரஷ்ய துருப்புக்கள் பங்கேற்கவில்லை என  மிஜின்ட்சேவ் தகவல். கசென்னி டோரெட்ஸ் ஆற்றின் குறுக்கே ஸ்லாவியன்ஸ்கில் உள்ள சாலைப் பாலத்தை உக்ரைன் வெடிவைத்து தகர்த்தியதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில், உக்ரைனிய படைகள் தடுப்பு தாக்குதல் மட்டுமே நடத்திய நிலையில், தற்போது ரஷ்ய இலக்குகள் மீது … Read more

ஆகஸ்ட் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 94-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 94-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.